Featured Section
Contact form
Search This Blog
Footer Copyright
Popular Posts
Nextiva
History of Ocean In tamil - கடலின் வரலாறு தமிழில் பகுதி 1
பூமிக்கு செங்குத்தாக மேலே சென்றால். ஒளிரும் நட்சத்திரங்கள், மயான அமைதி என கண்கொள்ளாக் காட்சியாகவே இருக்கின்றன. அதே நேரெதிராக கீழ்நோக்கி கடலுக்குள் சென்றாலும், அதே போல் ஒரு அமைதி துளியும் ஒளியில்லாத கரும் இருள் நட்சத்திரங்களாய் வண்ண வண்ண மீன்கள், நட்சத்திர மீன்கள் நீல நிற போர்வையால் போர்த்தியதுப் போல நீராலே அமைந்தது தான் இந்த உலகு. இத்தனை இலட்ச லிட்டர் நீரும் இங்கேயே உருவானது அல்ல, பல்லாயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தூரம் கடந்து விண்வெளியில் இருந்து வந்தவை. வானில் சுற்றித்திரியும் எரிக்கற்களில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் இராசயனங்களும், கார்பன் டை ஆக்சைடு இராச்சியனங்களும் சின்னஞ்சிறு பனிக்கட்டிகளாக ஒட்டிக்கொண்டிருக்கும். நேரெதிரே வரும் எரிக்கற்கள் ஒன்றோடொன்று மோத பெரு வெடிப்பு ஏற்பட்டு இராசயனங்கள் பகிரப்பட்டுக்கொண்டன. அந்தப் பெரு வெடிப்பில் பல கோள்கள் உருவாகினாலும் எச். டூ ஓ எனும் இரசாயன நீர் ஒரு கோளில் தங்கிக்கொண்டது போல ஒரு கோள் உருவானது. கிட்டத்தட்ட 75% நீரினால் ஆன அந்தக் கோள் தான் நீங்கள் காலூன்றியுள்ள பூமி. இந்த உலகை நீலப்பூச்சால் அலங்கரித்த கடல், பல பெரும் அழிவுகள் ஏற்படவும் காரணமாக இருந்தது. விண்வெளியில் இருந்து காணும் போது பூமி முழுவதுமே நீல நிறமாக காட்சியளிக்கிறது.
கடல் வரலாறும், ஆய்வும்:
இந்த நீரிலிருந்து தான் முதல் உயிர் உருவானது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல ஆயிரம் ஆண்களுக்கு முன் பெருவெடிப்பினால் ருவான பூமியில் பல மாற்றங்கள் நிகழத்தொடங்கின. 25℅ நிலத்தில் நடந்த பரிணாம வளர்ச்சியை விட, 75℅ கடலிலே அதிகம் மாற்றங்கள் நிகழத்தொடங்கின. காரணம் கடலில் அதிகப்படியான இராசயனங்களும், கனிமங்களும் நிறைந்திருந்ததோடு , கடல்நீர் ஓட்டத்தால் அவைகள் ஒன்றோடு மற்றொன்று மோதி புதியதொரு மாற்றத்தை உருவாக்கியதால் தான். ஆரம்பத்தில் ஒற்றை உயிர்களாக உருவெடுத்து பின் செடிகொடிகளாக, பாசிகளாக, கடல்பூச்சிகளாக, சிறுவகை மீன்களாக பின் எலும்புகள் கொண்ட பெரும் மீன்களக வளர்ந்தன. அந்த மீன்களின் நீச்சல் இறக்கைகள் கால்களாக பரிணாம வளர்ச்சி பெற்று அதுவே கடலில் இருந்து நிலத்திற்கு ஊர்ந்து வந்து பின் ஊர்வனவாக மாறி அதுவே பின்னாளில் பாலூட்டிகளாக உருவெடுத்தன. ஒரு வகை பாலூட்டி இனத்திலிருந்தே மனிதன் வந்தான் என்பது டார்வின், மில்லர் போன்ற அறிஞர்களின் கருத்து. World Register of Marine Species(WORMS) கருத்தின் படி பூமியில் உள்ள மொத்த உயிரினங்களில் 6℅ மட்டுமே நிலத்தில் வாழ்கின்றன, மீதமுள்ள 94% உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன எனக் கூறியுள்ளது, ஆனால் இது குறைவான அளவே, 36.1கோடி சதுர கிலோமீட்டர் உள்ள மொத்த கடற்பரப்பில், வெறும் 5% கடல்பரப்பை மட்டுமே மனிதர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதில் மட்டுமே 7 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆய்வு செய்யப்படாத 95% ஆழ்கடல் பகுதியில் குறைந்தது 2 கோடி உயிரினங்கள் இருக்கும் என அமெரிக்காவின் National Ocean Service தெரிவிக்கின்றது. இத்தகைய பெரும் கடலின் சராசரி ஆழம் 4200 அடியாக உள்ளது, அதாவது 4 கிலோமீட்டர் தூரம் , ஆனால் கடலின் ஆழம் அதோடு முடிந்துவிடவில்லை, உலகிலேயே மிக ஆழமான கடற்பகுதியாக மரியான அகழி உள்ளது. ஆஸ்திரேலியாவின் வடக்கே, ஹவாய் மற்றும் பிலிப்பைன்ஸ்கு இடையில் தான் அமைந்துள்ளது. அந்த அகழியின் உள்ள Challenger Deep எனும் பள்ளத்தாக்கு பகுதி தான் உலகிலேயே மிக ஆழமான கடற்பகுதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மேற்பரப்பில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் ஆழமாகும்.
மரியானா அகழியும், கப்பல்களின் வருகையும்:
1960 ல் தான் அமெரிக்கா கடற்படை லெப்டினன்ட் டான் வால்ஷ்( Don Walsh) , சுவிட்சர்லாந்து கடற்பொறியாளர் ஜாக்குவிஸ் பிக்கார்டு (Jacques Piccard) 11 கிலோமீட்டர் மரியான அகழியின் அடிப்பகுதியை தொட்டவர்கள் எனும் சாதனையைப் படைத்தனர். கடலின் ஆழத்தில் இருள் சூழ்ந்திருக்க, கடலின் மேற்பரப்பில் நீலப்போர்வையை விரித்தப் போலவே காட்சியளிக்கிறது. ஆனால் கடல் ஏன் நீல நிறத்தில் மட்டுமே காட்சியளிக்கிறது. சூரிய ஒளியில் இருந்து வரும் அனைத்து வண்ணங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு அலைநீளங்கள் கடலின் மேற்பரப்பால் அதிகளவில் உறிஞ்சப்படுவதால் அதன் நீல அலைநீளங்கள் மட்டும் ஆழமாக ஊடுருவி பிரதிபலித்து நீல நிறத்திற்கு வழிவகுப்பதன் விளைவாக கடல் நீல நிறத்தில் தெரிகிறது. வானிலிருந்து விழும் மழை பாறைகளைப் பிழந்து உப்பு மற்றும் கனிமங்களுடன் ஆறாய் கடலில் கலக்கின்றன. கடல் நீர் ஆவியாகும் போது, நீரில் கலந்திருக்கும் உப்பை அப்படியே விட்டுவிடுவதால் கடல் நீர் உப்பாய் இருக்கின்றன.சக்கரத்தின் கண்டுபிடிப்பால் நிலப்பரப்பு அளக்கப்பட்டது போல, கப்பல் கண்டுபிடிப்பால் ஆழ்கடல் ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. 1519 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மெகல்லன் எனும் ஆராய்ச்சியாளர் தனது ஐந்து மாலுமி கப்பல்களுடன், ஸ்பெயினிலிருந்து புறப்பட்டார்,ஆனால் அவர்கள புறப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஐந்து கப்பல்களில் விக்டோரியா எனும் ஒரேயொரு கப்பல் மட்டுமே கரை திரும்பியது. கடல் என்பது அழகானது மட்டுமல்ல, மிகவும் ஆபத்தானது என்று அன்று முதலே தெரியத்தொடங்கியது.
ஒவ்வொரு நாட்டின் ஆராய்ச்சியாளர்களும், கப்பல்களை எடுத்துக்கொண்டு கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு கப்பலுக்கும் ஒரு இலக்கு இருந்தது. அதில் மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியாவைக் கண்டுபிடிப்பதே ஒற்றை இலக்காக இருந்தது. அவர்களுக்கு மருத்துவத்திற்கு மஞ்சளும், மிளகும் அதிகளவில் தேவைப்பட்டதால் அவை அதிகம் கிடைக்கும் இந்தியாவை நோக்கி பயணத்தை தொடங்கினார். அதில் முக்கியமானவர்கள் மேற்கத்தியர்களான கொலம்பஸ் மற்றும் வாஸ்கோடகாமா ஆகியோர் ஆவர். இந்தியா என நினைத்து கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது,உண்மையான இந்தியாவிற்கு வாஸ்கோடகாமா வந்தடைந்ததும் கடல் வழியே தான். 1498 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி சாவோ கேப்ரியல் எனும் கப்பலின் மூலம் இந்தியாவில் உள்ள கோழிக்கோடை வந்தடைந்தார். வாஸ்கோடகாமா இந்தியாவைத் தொட்ட ஆயிரம் ஆண்களுக்கு பின் அதே கடல் வழியாக இந்தியாவின் சூரத் துறைமுகத்திற்கு டெக்டர் எனும் கப்பல் வந்தடைந்தது. அந்தக் கப்பலிலிருந்து காலடி எடுத்து வைத்த கிழக்கிந்திய கம்பெனி நிறுவனம் நாட்டையே ஆக்கிரமித்தது. கடல் கடந்து நாட்டை ஆக்கிரமிப்பவர்கள் அந்த கடலையே ஆக்கிரமித்ததாக நினைத்துக்கொள்கிறனர். நிலத்தில் நடந்த போராட்டங்களும், கடலை நோக்கி நகர தொடங்கின.
Post a Comment