Featured Section
Contact form
Search This Blog
Footer Copyright
Popular Posts
Nextiva
History of Ocean In Tamil part 2- கடலின் வரலாறு தமிழில் பாகம் 2
தமிழர்களின் கடலாட்சி:
நிலத்தின் மீது ஆசைக்கொண்ட ஆட்சியாளர்கள் கடலையும் கூறுபோடத் தொடங்கினர். மறுபுறம் பெரும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களும்,கடற்கொள்ளையர்கள்மாறி கடலிலும் தங்கள் தொழிலைத் தொடங்கினர். ஆனால் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதுப் போல கடலை ஆள்வது என்பது நடக்காத ஒன்று. காரணம் மனிதன் எத்தனை முறை கடலை ஆள நினைத்தாலும் இறுதியில் கடலே வெற்றிக் கொள்கிறது. மனித உயிர் தோன்றக் காரணமாக இருந்த கடலே பல மனித உயிர்களை காவு வாங்கியது. நீல நிற கடலில் சிவப்பு நிற இரத்தம் படியத் தொடங்கியது. தமிழ்நாட்டிற்கும் கடலிற்கும் ஒரு தொடர்பு உண்டு , தமிழ்நாடு உட்பட தென்னிந்திய கடற்பகுதிகளை ஆட்சி செய்தவர்கள் தான் சேர, சோழ, பாண்டியர், அப்போது முதல் தற்போது வரை கடல் வழியாக பல போர்கள் நடந்து வருகின்றன. கி.பி 1000 நூற்றாண்டில் வாழ்ந்த சோழ அரசர் முதலாம் இராஜராஜ சோழன் கங்கை கொண்டான், பூம்புகார் தலைவன் கடராம்கொண்டான் என அழைக்கப்பட்டார். கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்டதற்கு காரணம் அம்மன்னரிடம் இருந்த பெரிய கடற்படை தான்.
தமிழரின் பெரும் கடற்படை எல்லாம், அப்போது மேற்கத்திய வல்லரசுகளிடம் கூட இல்லாத காலம் அது, இராஜேந்திர சோழனின் கடாரம் படையெடுப்பு 1026 ஆம் ஆண்டு தான் தொடங்கியது. நாகப்பட்டினம் துறைமுகம் தான் முதன்மைத் துறைமுகமாக விளங்கியது. கி,பி 1007 ல் சோழர்களின் போர்க்கப்பல் கடாரத்தை சென்றடைந்ததாக இந்தோனேசியாவின் வரலாற்று நூல் குறிப்பிடுகிறது. கடாரத்தை ஆண்டதலே கடாரம் கொண்டான் எனும் பெயர் பெற்றார் இராஜேந்திர சோழன். சேரநாட்டின் வட எல்லைப் பகுதியில் கூம்பின் பெரும் வாயில் பகுதியில் வாழ்ந்து வந்த கடம்பர்கள் கடம்பு மரத்தை சின்னமாக கொண்டு கடல் ஆட்சியில் ஈடுபட்டனர். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் கடம்பர்கள் கடலில் ஆரம்ப காலத்தில் ஆட்சி செய்தவர்கள் என குறிப்புகள் உள்ளன. கடம்பர்கள் கப்பலை உருவாக்குவதிலும், செலுத்துவதிலும், போரிட்டு வெல்வதிலும் கைத்தேர்ந்தவர்களாக இருந்ததாகவும், இருப்பினும் சேர மன்னன் நெடுஞ்சேரலாதன் அவர்களுடன் போரிட்டு கடம்பர்களை வீழ்த்தியதாகவும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இப்படியாகவே பல நூறு ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்கும் கடலுக்குமான தொடர்பு இருந்துவந்துள்ளது.
கடலில் மர்மம்:
வாஸ்கோடகாமா இந்தியா வருவதற்கு முன், கிழக்கு ஆப்பிரிக்கா கடற்கறையில் பல முஸ்லிம் துறைமுகங்களைப் பார்வையிட்டு , முஸ்லிம் கப்பல்களுக்கு எதிராக பிரச்சாரங்களை தொடங்கினார். கடல் வழியாக மக்காவிற்கு சென்று திரும்பிய பல முஸ்லிம் கப்பல்களை வாஸ்கோடகாமா கடலிலே அழித்த வரலாறும் உண்டு. 1898 ல் அமெரிக்கா- ஸ்பெயின் இடையேயான போர், 1905 ல் ஜப்பான்-ரூஸ்ஸோ போர் , 1914 முதல் நடந்த உலகப்போரில் நடந்த கோரங்கள் 1971 ல் நடந்த இந்தியா- பாகிஸ்தான் போர் எனப் பல போர்களினால் நீலக் கடல் இரத்தக் கடல்களுக்கு மாறியது. கடல் எல்லையில் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் அவல நிலையும் சில காலங்களாக நடந்து தான் வருகின்றன. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பனிப்போர் தொடங்க அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலே காரணம். சங்ககாலத்தில் இருந்து தற்போது வரை பல கப்பல்களும், செல்வங்களும், கடலுக்கு அடியில் மூழ்கியுள்ளன. உலகில் உள்ள பெருங்கடலில் மொத்தம் 2 கோடி டன் தங்கம் இருப்பதாக அமெரிக்காவின் The National Oceanic And Atmospheric Administration (NOAA)தெரிவிக்கின்றது. அந்த தங்கம் கிடைக்கப்பெற்றால் ஒவ்வொரு மனிதனுக்கும் 9 கிலோ தங்கம் கிடைக்ககூடும் என்கிறது National Oceanic And Atmospheric Administration (NOAA). பல்லாயிரக்கணக்கான செல்வங்களும், கப்பல்களும் கடலுக்கு அடியில் ஆதரவின்றி கிடப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலப்பரப்பில், பல நகரங்களும், ஊர்களும் கடலுக்கு சொந்தமாகிவிட்டன. இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் லெமுரியா கண்டம் எனும் குமரிக்கண்டம் கடலுக்கு அடியில் மூழ்கியதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இது மட்டுமின்றி இன்னும் பல கப்பல்களையும், விமானங்களையும் மூழ்கடித்து கொண்டிருக்கும் மர்மதேசமும் கடலில் உண்டு. அது தான் எவரும் பயணிக்க அஞ்சி நடங்கும் பெர்முடா முக்கோணம். 70 ஆண்டுகளுக்கு முன் பெர்முடா முக்கோணம் நோக்கி சென்ற ஒரு கப்பல் தடயமே இன்றி மறைந்தவிட்டன. அதுமட்டுமின்றி ஒரு விமானமும் காணவில்லை. இதைனைத் தொடர்ந்து அந்த வழியாக பயணிக்கும் கப்பல்களும், விமானங்களும் தொடர்ந்து மாயமாகும் செயல் தொடர்ந்து வந்தது. இதற்காக பல காரணங்களும் கூறப்பட்டன. பெர்முடா முக்கோணத்தில் ஏலியன்களும், இராட்சத மிருகங்களும் இருப்பதாக கூறினர். ஆனால் என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியாமல் இன்றும் பெர்முடா முக்கோணம் மர்மமாகவே உள்ளது. கண்ணில் தென்பட்ட கடற்பகுதிகளிலே இவ்வளவு மர்மங்கள் என்றால், இன்னும் கண்ணிலே புலப்படாத கடற்பகுதிகளிலே எவ்வளவு மர்மங்கள் என வியக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கடல் தனக்குள் இழுத்த உயிர்கள் இப்படியென்றால் கடல் கொந்தளித்தால் அது மேலும் பல இலட்சம் உயிர்களைக் கொண்று குவிக்கிறது. அதற்கு ஆழிப்பேரலை, சுனாமி பேரலை எனப் பல பெயர்கள் உண்டு. 2004 ல் ஏற்பட்ட சுனாமியை நம்மில் யாரும் மறந்திருக்க முடியாது, நடு இரவில் கடலின் கோரத்தாண்டவத்தால் இந்தோனேசியா முதல் இந்திய வரை இலட்சக்கணக்கான உயிர்கள் காவு வாங்கப்பட்டது. இதற்கு முன் ஏற்பட்ட ஒரு சுனாமி தனுஷ்கோடி எனும் ஊரையே கடலுக்குள் இழுத்துச் சென்றது . இந்த கோர நிகழ்வுகளின் எச்சங்கள் இன்றம் நம்மை விட்டு நீங்க வடுவாக இருக்கின்றன. கடலில் வாழும் சுமார் 1 லட்சத்து ஐம்பதாயிரம் கிலோ எடைக் கொண்ட நீலத்திமிங்களம் தான் உலகிலேயே அதிக எடைக் கொண்ட உயிராக கருதப்படுகிறது.
கடலின் முக்கியத்துவம்:
மனிதர்களின் நவீன தொழில் நுட்பத்திற்கும் கடல் பெரும் உதவியாக இருந்து வருகிறது. இன்று நாம் பயன்படுத்தும் இண்டர்நெட் இணையச் சேவை தடையில்லாமல் பயன்பட கடலே உதவுகிறது. கடலுக்கு அடியே பல கிலோ மீட்டர்களுக்கு செல்லும் பைபர் கேபிள்கள் தான் பல நகரங்களை இணைத்து இண்டர்நெட் சேவை தடையில்லாமல் கிடைக்க செய்கின்றன. 75% கடலுக்கு நடுவே சிறிது நிலப்பரப்பு இருந்தாலும் , அந்த 25% நிலப்பரப்பு உருவாகக் காரணமும் இந்த நிலப்பரப்பு தான். கடலின் நீரோட்டத்தில் அவ்வப்போது நகரும் டெக்டோனிக் பிளேட்டுகள் ஒன்றோடொன்று மோதி நிலப்பரப்பை மேழெலுமாறு செய்கின்றன. இப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த மலைகளும், நிலப்பரப்புகளுமே மனிதன் வாழ்வதற்கு இடமளித்திருக்கின்றன. மனிதனுக்கு வாழ இடம் கொடுத்தது மட்டுமல்லாமல், மனிதன் வாழத் தேவையான வளிமண்டல ஆக்ஸிஜனில் 70% பெருங்கடலில் தான் உற்பத்தியாகின்றன. கடலில் உள்ள பனிப்பாறைகள் வெப்பமயமாதல் காரணமாக உருகி வருகின்றன. இதன் காரணமாக கடல் மட்டம் இன்னும் உயர வழிவகுக்கும். வேற்றுக் கிரகங்களில் நீர்த் தேடி அலையும் மனிதர்கள், உயிர்க் கொடுத்த கடலில் பிளாஸ்டிக் குப்பைகள், எண்ணெய் கழிவுகள், அணுக்கழிவுகள் என கொட்டப்பட்டு கடல் மாசடைவதும், ஒ இதன் காரணமாக கடல் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குவதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
Post a Comment