-->

History of Son of Cricket in tamil part 2, கிரிக்கெட்டின் பிதாமகன் விராட் கோலியின் வரலாறு தமிழில் பாகம் 2

3 minute read

 ஸ்லெட்ஜிங்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து சச்சின், டிராவிட் , கங்குலி,லக்ஷ்மணன், கும்ப்ளே, என அனைவரும் விலகியப் பிறகு  இளம் அணி ஒன்றை கோலியின் வசம் ஒப்படைத்து ஓய்வுபெற்றார் தோனி. ஆனால் அதையே சவாலாக எடுத்துக்கொண்டு இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக அமரவைத்திற்கிறார் கோலி. இருந்தாலும் அளவுக்கு மீறிய கோவம் வருகிறது, கத்துகிறார், எதிரணியை சீண்டுகிறார் என்பது தான் கோலி மீது வைக்கப்படும் விமர்சனம். ஆனால் ஸ்லெட்ஜிங் என்பது கிரிக்கெட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே கருதப்படுகிறது. எந்த நொடியிலும் எதிரணியினர் மனரீதியாக வலுப்பெற்றுவிடக்கூடாது என்பதற்காக கையாளும் ஒரு தந்திரம். கிரிக்கெட்டில் ஸ்லெட்ஜிங் என்பது ஆஸ்திரேலியா அணிக்கு வசப்படும் ஒன்றாகவே இருந்தது. அதுவும் இந்திய அணியுடனான ஆட்டங்களில், ஆஸ்திரேலியா வீரர்களின் சீண்டல் அதிகமாகவே இருக்கும். ஆனால் இந்தியாவில் கோலிக்கு ஸ்லெட்ஜிங் அதிகளவில் வசப்பட்டது. விராட் கோலி எதிரணியை சீண்டுகிறார் என்பதைக் காட்டிலும் "நீ எப்படியோ அப்படியே தான் நானும் "என்பது கோலியின் பார்முலா.  தன்னை சீண்டுபவர்களுக்கு பேட்டால் பதிலளிப்பது ஒரு ரகம். ஆனால் கோலி வார்த்தைகளாலும், பேட்டாலேயே பதிலளித்தார், இது அவரின் மன உறுதியின் வெளிப்பாடாகவே பார்க்கப்பட்டது. 

History of Son of Cricket


விமர்சனங்களை வெற்றியால் வென்றவர்:

இதனால் விராட் கோலி பெருமளவில் விமர்சிக்கப்பட்டார், ஆஸ்திரேலியா அணியுடனான இவரின் மோதல்கள் இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடியது, இத்தொடரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது, இதனால் விராட் கோலி கடுமையாக விமர்சிக்கப்பட்டார், இதனால் இரண்டாவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயம் இத்தொடரின் இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் LBW முறையில் அவுட் ஆனதும் , மூன்றாம் நடுவரிடம் ரிவ்யூ கேட்கலாமா? வேண்டாமா? என எண்ணி களத்திற்கு வெளியே இருக்கும் தனது அணியினரிடம் கேட்டார் , ரிவ்யூ உம் எடுத்தார், கடும் எதிர்வினையாற்றினார் கோலி, மைதானத்திலே தனது ஆத்திரத்தை காட்டினார். விதிமுறைகளை மீறி ஸ்மித் எப்படி பெவிலியனில் இருப்பவரிடம் ஆலோசனை கேட்கலாம் எனப் பொரிந்து தள்ளினார். இதையடுத்து ஸ்மித் அவர்களுக்கு ரிவ்யூ மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பேசும் பொருளாக மாறியது. கோலியிடம் மன்னிப்பு கோரினார் ஸ்மித். ஆனால் ஆஸ்திரேலியா ஊடகங்கள் கோலியை கடுமையாக விமர்சித்தனர். கோலி சிறுபிள்ளையை போன்று நடந்துக் கொள்வதாக விமர்சிக்கப்பட்டார். இது குறித்து கோலியும் தனது வெளிப்பாட்டினை கூறினார், "இந்தியா தோற்றாலும், வெற்றி பெற்றாலும் அது களத்தில் இருக்கும் வீரர்களால் தான் நிகழவேண்டும். "நேரடியாகவே கூறினார். அந்தத் தொடரின் முடிவில் கோலி அளித்த பேட்டி இன்னும் சர்ச்சயை உண்டாக்கியது. ஸ்மித் மன்னிப்பு கோரியப் பிறகு, இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. 

விராட் கோலி மீது எழுப்பபட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் தனது செயல்களாலேயே பதிலளித்துள்ளார் விராட் கோலி. கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கி கொண்டதன் விளைவு இன்று கிரிக்கெட் உலகின் கடவுளாக உருமாறி நிற்கிறார். தான் செய்வது தவறு என்று தெரிந்தால் மன்னிப்புக் கோரவும் தயங்காதவர் கோலி. 2012 ஆம் ஆண்டு சிட்னி நகரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியா அணி டெஸ்ட் போட்டி விளையாடிக் கொண்டிருந்தது, இளமீ வீரரான விராட் எல்லைக்கோட்டில் பீல்டிங் செய்துக் கொண்டிருந்தார், ஸ்லெட்ஜிங் செய்வதில் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு சற்றும் குறையாத அந்நாட்டு கிரிக்கெட் இரசிகர்கள் விராட் கோலியை சீண்டிணார்கள் , இதனால் நிதானத்தை இழந்த அவர் தனது நடுவிரலைத் தூக்கி காட்டினார், கோலியின் இந்த செயல் ஆஸ்திரேலியா பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக மாறியது. இந்த விஷயம் விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்த நடுவர் ரஞ்சன் மதுகலே கோலியிடம் விசாரணை மேற்கொண்டார், தான் செய்ததை தவறு ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரினார். கிரிக்கெட் களங்களில் ஆக்ரோசத்தை காட்டும் கோலி, குடும்ப வாழ்க்கையில் அதற்கு நேரெதிரானவர். தாயிடமும், நண்பர்களிடமும், காதலியிடமும் அன்புக் காட்டுவதில் தனக்கு நிகர் தானே  என வாழ்பவர். 

குடும்ப வாழ்க்கை:

IPL தொடர்களில் எல்லாம் கோலி சோபிக்க தவறிய போதெல்லாம், சர்சசைகள் அவரை பின்தொடர்ந்தது. அதிலும் கோலியின் காதலி அனுஷ்கா சர்மா  மைதானத்திற்கு வந்தால் போதும் அவரின் விமர்சகர்களுக்கு கட்டன்ட் கிடைத்தது என்று குஷியாகிவிடும். கோலியின் பேட்டிங் சரிவை சந்திக்கும் போதெல்லாம் அதற்கு காரணம் அவரின் காதல் தான் என்று வறுத்தெடுக்க , அதற்கு ஒற்றைச் சொல்லால் பதிலளித்தார் கோலி, "தனது காதலி குறித்த வசைப்பாடல்கள் வெட்க கேடானது " எனக் கூறி அனைவரின் வசையையும் நிறுத்தினார். தனது வாழ்க்கையின் பொக்கிஷம் என தனது காதலியைக் கொண்டாடினார் விராட் கோலி. ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல மனைவி கிடைத்து விட்டால் வேறு என்ன வேண்டும், அனுஷ்கா தான் என் பலமே என அனுஷ்கா குறித்து கோலி கூறிய வார்த்தைகள் இவை. பயிற்சியாளர் மீதான கோலியின் அன்பும் அளப்பரியது. கோலிக்கு ஒன்பது வயது முதல் பயிற்சி அளிப்பவர் தான் சர்மா, இன்று வரை கோலியின் அனைத்து ஆட்டங்களையும் பார்த்து ரசிப்பவர் , பயிற்சியாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த கோலி, தனது தந்தைக்கு பின்னர், தன்னை முழுமையாக புரிந்துக் கொண்டவர் தனது பயிற்சியாளர் தான் என்றுக்கூறி நெகிழ்ந்தார். 

கும்ப்ளே உடனான மோதல், கேப்டன் பதவியில் ரோகித் உடனான பணிப்போர், என கோலி கடந்து வந்த பாதை மிக எளிதானதல்ல,  இவையனைத்தையும் தன்னை ஏற்றி விட்டு ஏணியாகவே மாற்றியிருக்கிறார் விராட் கோலி. தான் வெறும் கிரிக்கெட் வீரன் அல்ல இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த தலைவன் என்பதை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நிருபித்துக்கொண்டே இருக்கிறார் கோலி. கோலியின் பலம், அவரின் தன்னம்பிக்கை, ஒவ்வொரு முறையும் அணிக்கு என்ன தேவை என்பதை கணித்தே களம் காண்கிறார் கோலி. "இன்னும் கடினமாக உழைத்து அணிக்க தனது பங்களிப்பனை இன்னும் சிறப்பாக தர வேண்டும் என்ற மனநிலையில் தான் இருக்க நினைக்கிறேன்" என்ற அவரின் வார்த்தைகளே அவருடைய தன்னம்பிக்கைக்கு உதாரணம். சாதனைகள் என்பது பெரும்பாலும் அணியின் நலன் சார்ந்தே இருக்க வேண்டும். அந்த வகையில் இந்திய அணியில், ஒருபடி முன்னே நிற்கிறார் என்பது தான் நிதர்சனம். தேசத்திற்காக ஆடுவதே தனது கடமை என்பது கோலியின் நிலைப்பாடு. கிரிக்கெட் கடவுள் சச்சின் சதங்களில் சதம் கண்டபோது, அவரின் சாதனைகளை எவராலும் உடைக்க முடியாது என கருதப்பட்டது, ஆனால் இதனை இன்று யாரால் முறியடிக்க முடியும் என்றால்,அங்கு  நினைவிற்கு வருவது கோலி மட்டும் தான்.