கி.பி 1886 ஆம் ஆண்டு , இவ்வளவு பிரம்மாண்டமான கோவிலை யார் கட்டியது? என்ற மிகப்பெரிய தேடல்! தொடங்க ஆரம்பித்தது. சில ஆராய்ச்சியாளர்கள் இக்கோவிலை மனிதர்கள் கட்ட வாய்ப்பில்லை என்றும், இந்த கோவிலைக் கட்டியது வேற்றுக் கிரக வாசிகள் என்றும் கூறத்தொடங்கினார்கள். அதிலும் சில பேர் இதை பூதமோ , ஏலியனோ கட்டவில்லை , ஒரு மாமனிதர் தான் கட்டிருக்கவேண்டும் எனக் கூறினார்கள். அந்த மாமனிதர் கரிகாலச் சோழன் என்றும் கூறினார்கள். ஆனால் இந்த குழப்பங்களுக்கு எல்லாம் விடையளிக்க கூடிய வகையில் கி.பி 1886 ஆம் ஆண்டு ஜெர்மன் ஆர்க்கியாலிஜஸ்ட் E. Hultzsch என்பவர் அந்த கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டை மொழிப்பெயர்த்து ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வின் மூலம் அந்த கோவிலைக் கட்டியது பூதமோ, ஏலியனோ, கரிகாலச் சோழனோ கிடையாது என்றும் இக்கோவிலைக் கட்டியது தமிழனின் பெருமையைக் கடல்கடந்து கொண்டுப் போன "த கிரேட் இராஜராஜ சோழன் "என்பது கண்டறியப்படுகிறது. அந்த பிரம்மாண்டமான கோவில் தான் தஞ்சை பெரிய கோவில்.
வரலாறு:
கி.பி 1010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயில் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் கழித்தும் இன்னும் நிலையாக இருப்பது பார்ப்பவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நம் மன்னர் இராஜராஜ சோழன் கடல் கடந்து செல்லும் போது இலங்கையை அடைகிறார். அங்கு புத்தர் சிலைகள் இவர் பார்க்கிறார். இந்த சிலைகள் அளவில் பெரியதாகவும், வியக்கத்தக்க வகையில் இருப்பதை இவர் கவனிக்கிறார். இவருக்கு இதைப் பார்த்த உடனே, நம் தெய்வமான சிவனுக்கு ஒரு பெரிய சிலையை நாம் நிறுவ வேண்டும் என மனதில் ஒரு எண்ணம் தோன்றுகிறது. இந்த எண்ணத்தின் விளைவாக இவர் இத்திட்டத்தை செயல்படுத்த தொடங்குகிறார். இத்திட்டத்தின் தொடக்கமாக குஞ்சரமல்லன் இராஜராஜபெரும்தச்சன் என்பவரை கட்டிடக்கலை வடிவமைப்பாளராக இராஜராஜ சோழன் அவர்கள் நியமிக்கிறார். இந்த கோவில் கட்டத் தேவையான பொருட்செலவை மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். இதற்கு அடுத்தக்கட்ட கட்டமாக கி.பி 1003 ஆம் ஆண்டு கோவிலைக் கட்ட ஆரம்பிக்கிறார்கள். இவர்களின் திட்டத்தின் படி கோவிலை முழுவதும் கிரானைட் கற்களால் கட்ட வேண்டும். ஆனால் இவர்கள் கட்ட நினைத்த இடம் முழுவதும் வண்டல் மண் நிறைந்த இடம். இப்பகுதியில் கிரானைட் கற்களை எடுக்க முடியாத காரணத்தால், இப்பகுதியில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள புதுக்கோட்டையில் இருந்து கிரானைட் கற்களை கொண்டு வந்தனர்.
இக்கற்களை வெட்டுவதற்காக நம் மன்னர் இராஜராஜ சோழன் புதிய முறையை கையாண்டுள்ளார். இந்த முறையில் அந்த கிரானைட் கற்களை செங்குத்தான முறையில் வைத்து , அக்கற்களில் நேர்க்கோடாக துளையிட்டு அதில் ஒரு வகையான மரக்கட்டையை இறுக்கமாக வைத்துள்ளனர் , அதில் தண்ணீர் ஊற்றி வளர்த்துள்ளனர். பின்பு அந்தக் கட்டை விரிவடைவதன் மூலம் அக்கற்களை உடைத்துள்ளனர். இப்படி வெட்டப்பட்ட கற்கள் யானைகள் மூலம் தஞ்சை கோவிலுக்கு எடுத்துவரப்பட்டன. மொத்தமாக 1,30000 டன் எடை கொண்ட கிரானைட் கற்கள் யானைகள் மூலம் தஞ்சை கொண்டுவரப்பட்டது. தரம் வாய்ந்த சிற்பக் கலைஞர்களை இராஜராஜ சோழன் அழைத்து வந்து, மிகவும் நுட்பமாகவும், அழகாகவும் சிலைகளை அக்கற்களில் வடிவமைத்தார்.
நம்பமுடியாத செயல்கள்:
அக்கற்களைக் கொண்டு அழகான சிலைகளை உள்ளடக்கிய கோவிலின் பதினைந்து அடுக்குகளை கட்டி முடிக்கிறார்கள்.இதனால் அங்குள்ள அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர், ஆனால் அதற்குள் மன்னர் இராஜராஜ சோழனின் உத்தரவு அனைவரையும் அதிரவைத்தது. அந்த உத்தரவில் கோவிலின் கோபுரத்தில் 80 டன் எடைக் கொண்ட ஒரு ஒற்றை கல்லால் தான் அமைக்க வேண்டும் என உத்தரவிடுகிறார். சொன்ன படியே கூரையையும் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லாலே அமைக்கிறார்கள். ஆனால் இன்று வரை அந்தக் கல்லை எப்படி பதினைந்து அடுக்குகளின் மேற்புறத்தில் அமைத்தார்கள் என்பது கண்டறிய முடியாத இரகசியமாக உள்ளது.
இக்கோயிலின் மற்றொரு இரகசியமாக இருப்பது, இக்கோவிலில் உள்ள சிவ லிங்கம், கிட்டத்தட்ட 12 ஆடி உயரம் கொண்ட இச்சிலையை இப்படி கோவிலின் உள்ளே வைத்தார்கள் என்பதும் புரியாத புதிராகவே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இக்கோயில் இதுவரை 6 நிலநடுக்கங்களை சந்தித்தும், துளி அளவுக் கூட சேதாரம் இல்லமால் இருப்பது பார்ப்பவரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோவிலின் அடித்தளம் டைனமிக் கட்டட வடிவமைப்பு முறையைப் பின்பற்றி கட்டியுள்ளார்கள்.
இராஜராஜனின் தமிழ் பற்று:
இக்கோவிலின் மூலம் இராஜராஜ சோழன் தனது தமிழ் பற்றையும் வெளிப்படுத்தியுள்ளார். அது எப்படி என்றால் இக்கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி, தமிழில் உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216.
இதேபோல தஞ்சைக் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் உயரம் 12 அடி, தமிழில் உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை 12,இது மட்டுமல்ல சிவலிங்க பீடத்தின் உயரம் 18,தமிழ் மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை 18,இதுவே இராஜராஜ சோழனின் தமிழ் பற்றுக்கு சிறந்த உதாரணம் ஆகும்.
Post a Comment