Featured Section
Contact form
Search This Blog
Footer Copyright
Popular Posts
Nextiva
History of Charlie Chaplin in tamil part 1- சார்லி சாப்ளினின் வாழ்க்கை வரலாறு தமிழில் பகுதி 1.
என் வாழ்க்கையில் எவ்வளவோ துன்பங்களை அனுபவித்து இருக்கிறேன்..!ஆனால் அதில் ஒன்றைக் கூட நான் என் இதழ்களுக்கு தெரியப்படுத்தியதில்லை..!அது வழக்கம் போல் சிரித்துக்கொண்டே இருக்கும்...!
இந்த வாக்கியத்திற்கு சொந்தக்காரர் சார்லி சாப்ளின். தன்னுடைய நகைச்சுவையால் சிரிப்பு எனும் மருந்தை திரைப்படங்கள் மூலம் உலக மக்களுக்கு கொடுத்து விருந்துப்படைத்தவர் தான் சார்லி சாப்ளின். புன்னகை மன்னன் என அழைக்கப்படும் சார்லி சாப்ளின் 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி பிறந்தார். சாப்ளினின் தாயார் ஒரு நாடக நடிகை. இவரின் இரண்டாவது கணவருக்கும் இவருக்கும் பிறந்தவர் தான் சார்லி சாப்ளின். இவரின் தந்தை அவரது குடும்பத்தையும், சார்லியையும் விட்டுவிட்டு ஓடிவிட்டார். இதனால் குடும்பம் வறுமையில் வாடியது. குடும்பம் வறுமையில் வாடியதால் சார்லியும் அவரது அண்ணனும் விடுதிகளில் ஆடிப் பாடி சம்பாதித்து வந்தனர். சார்லின் குள்ளமாக இருந்ததால் அந்த உருவமே அவருக்கு நடிப்பதற்கு சாதகமாக அமைந்தது. இதன் காரணமாக விரைவிலேயே தன் திறமைகளை மேடையில் காட்ட வாய்ப்பு வந்தது. "Music Hall" நிகழ்ச்சியில் நடித்துக் கொண்டிருந்த சாப்ளினின் புகழ் பரவத் தொடங்கியது. இதற்கிடையே துப்பறியும் இலக்கியத்தில் அன்றுப் போல இன்றும் மங்காத புகழோடு இருக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை நாவலாக்கி எழுதி நடிக்க தொடங்கினார் வில்லியம் ஜில்லட் என்பவர். நாடகத்தில் ஒரு பணிப்பையனின் வேடம் சாப்ளினுக்கு கிடைத்தது. இந்த வேடம் சிறுவனான சாப்ளினிற்கு மேலும் புகழை சேர்த்தது. அவரது புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வரத்தொடங்கின. இந்த நிலையில் இங்கிலாந்தில் Music Hall வைத்திருந்த பிரெட் கார்னோ என்பவர் சாப்ளினிற்கு ஒரு கதாப்பாத்திரம் கொடுத்தார். அந்த வேடம் ஒரு குடிகாரனின் வேடம், இவ்வேடம் மக்கள் மனதில் மேலும் சார்லியை வலுவேற்றியது. மக்களை சிரிக்கவும், ரசிக்கவும் வைத்தார் சார்லி சாப்ளின்.
சார்லி சாப்ளினின் ஏற்ற இறக்கங்கள்:
பிரெட் கார்னோவின் புகழ் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு பரவியது . இந்த குழு அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்த கிளம்பியது. "A Night in Music Hall" எனும் நிகழ்ச்சியை இக்குழு நியூயார்கில் நடத்தியது. இதில் குடிகாரனாக நடித்து சேட்டைகளைச் செய்திருந்தார் சார்லி. நியூயார்க்கில் நடித்துக் கொண்டிருந்த சாப்ளினிற்கு புகழும் பணமும் தேடிவந்தது. ஆனால் மனநிம்மதி மட்டும் ஏற்படவில்லை. அதற்கு காரணம் இங்கிலாந்தின் மீதான பிடிப்பும், நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் தனது தாயின் மீதான சிந்தனையும் தான். அப்போது அவருக்கு ஒரு வந்திருந்தது, அதில் அவரை ஒரு விலாசத்திற்கு வருமாறு கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அழைப்பு விடுத்திருந்த "Keystone Comedy Film" நிறுவனத்திற்கு சென்றார் சாப்ளின். அங்கு மாக் சென்னட்டை சந்தித்தார். அங்கு சாப்ளின் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள். வாரத்திற்கு சம்பளம் 170$ அது சாப்ளினால் நினைத்துக் கூட பார்க்க முடியாது பணம். மேக்ஸ் சென்னட் நிறுவனத்தில் ஒப்பந்தத்தின் படி பணி செய்ய தொடங்கினார் சார்லி. அவரின் புகழ்பெற்ற நடிப்பான குடிகாரன் போல நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர் நடித்த "Making a living "திரைப்படம் 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகியது. ஆனால் படம் வெற்றிப் பெறவில்லை. படத்தை பத்திரிக்கைகள் மட்டமாக விமர்சித்தன. ஒரு பத்திரிக்கை மட்டும் சாப்ளினின் பெயரைக் குறிப்பிடாமல், அவர் நன்றாக நடித்திருந்தார் என எழுதியிருந்தது. மாக் சென்னட்டிற்கோ மிகவும் ஏமாற்றம், தெரியாமல் சாப்ளினை அதிக சம்பளத்திற்கு எடுத்து விட்டோமோ என்ற கேள்வி எழுந்தது. படத்தின் தோல்வி சாப்ளினை பாதித்தது, அவரைப்பற்றி மற்றவர்கள் விமர்சிக்கும் வார்த்தை அவரை வாட்டியது. மீண்டும் பிரெட் கார்னோ குழுவுக்கு சென்றுவிடலாமோ என எண்ணினார் சாப்ளின்.
மீண்டெழுந்த சிரிப்பு அரசன்:
தன் தோல்விக்கு என்ன காரணம் என யோசிக்க தொடங்கினார் சாப்ளின். தனக்கென ஒரு நகைச்சுவை பாணியை அமைத்துக் கொண்டால் தான் வெற்றி பெற முடியும் என எண்ணினார் சாப்ளின். இதற்கிடையே லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பென்னிஸ் கடற்கரையில் ஒரு படத்தை எடுக்க மாக் சென்னட் திட்டமிட்டார். இந்தப் படத்தில் சாப்ளின் நடித்தார். அவருக்கு என்ன வேடம் என்று சொல்லவில்லை. அப்போது அவர் மிகப்பெரிய சர்ட்களையும், அவரின் அளவுக்கு பெரிய கால் பூட்களையும் இரு கால்களுக்கு மாற்றி அணிந்துக்கொண்டு வெளியே வந்தார். அப்போது அவரைப் பார்த்து அனைவரும் ஏளனமாக சிரித்தனர். ஆனால் சாப்ளினை இமயமலையின் உச்சிக்கு அழைத்து சென்றது அந்த ஆடை அணிகலன்கள் தான். "Auto Kid Racers"எனும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. வெறுப்பின் காரணமாக சென்னட் சாப்ளினை படப்பிடிப்பிற்கு அனுப்பிவிட்டு, அவருக்கு என்ன கதாப்பாத்திரம், அவர் படத்தில் இருக்கிறாரா? என்பதைக் கூட இயக்குநருக்கு சொல்லவில்லை. பென்னிஸ் கடற்கரையில் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது சிறுவர்கள் மோட்டார் பந்தயம் செய்யும் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது சரியான நேரத்தில் சாப்ளின் கேமரா முன் வந்து நிற்கிறார். ஆனால் இயக்குநர் அவரை கேமாராவுக்கு அப்பால் தள்ளிவிடுகிறார். மீண்டும் கேமாராவுக்கு முன் வந்து நிற்கிறார் சாப்ளின், அப்போது அவரை தன் கால்களால் எட்டி உதைக்கிறார் இயக்குநர். இதேப் போல அவர் வருவதும், தள்ளிவிடுவதும் நீண்ட நேரமாக நடக்கிறது, இது கேமாராவிலும் பதிவாகிறது. இதைப் பார்த்த சென்னட்டிற்கு கடும் கோபம் வந்துவிட்டது. படத்தை செலவு செய்து எடுத்துவிட்டதால் , வேறு வழியின்றி வெளியிடுகிறார் சென்னட். ஆனால் நடந்ததோ வேறு படம் பிரம்மாண்ட வெற்றி, படத்தை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கிறார்கள் மக்கள். பாமரர்கள் முதற்கொண்டு படித்தவர் வரை படத்தை பார்த்து சிறித்து தள்ளுகிறார்கள். யார் இந்த நடிகர் என அனைவரும் கேட்க, பத்திரிக்கைகள் சார்லி சாப்ளினை புகழ்ந்து தள்ளி எழுதினார்கள். தன் கள்ளாப்பட்டி நிறைவதை கனவா? நிஜமா? என திக்கு முக்கு ஆடினார் சென்னட். விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சாப்ளினின் அடுத்தப் படம் எப்போது வரும் என சென்னட்டை துளைக்க ஆரம்பித்துவிட்டார்கள். சாப்ளின் செய்த பலவகை நகைச்சுவை காட்சிகள் இதுவரை யாரும் செய்யாதது. இதனால் அவரது புகழ் அமெரிக்கா எங்கும் பரவத் தொடங்கியது.
திரை வாழ்க்கை:
சாப்ளினின் காமெடிகளில் மிகவும் பிரபலமானது குத்துச்சண்டை. இதில் அவர் செய்யும் லூட்டிகளால் அரங்கமே சிரித்தது. சாப்ளினின் புகழ் அமெரிக்கா எங்கும் பரவத்தொடங்கியதை அடுத்து பல நிறுவனங்கள் அவரைக் கொத்திக்கொள்ள முயற்சிகள் எடுத்தன. அதில் ஒரு நிறுவனம் தான் Essanay நிறுவனம். இந்நிறுவனத்தின் தொடர் முயற்சியால் சாப்ளினோடு ஒரு ஒப்பந்தம் செய்தது. இதனைத் தொடர்ந்து சிகாகோ சென்ற சாப்ளின் "His New Job" முதற்கொண்டு நடித்த படங்கள் சாப்ளினிற்கு வெற்றியை அள்ளிக் கொடுத்தது. இந்நிலையில் ஒருமுறை கலிபோர்னியாவில் நடந்துச் சென்ற சாப்ளின் அப்போது பசியால் துடித்துக் கொண்டிருந்த ஏழ்மையான ஊர் சுற்றும் ஒருவர் பார்த்தார். அவருடனான சந்திப்புகளின் விளைவுகளை மையமாக வைத்து "the tramp" என்ற படத்தை எடுத்தார் சாப்ளின் . இது உலகத் திரைப்படக் காவியங்களில் ஒன்றாக எல்லாராலும் பார்க்கப்பட்டது. முதல் உலகப் போர் நடந்துக் கொண்டிருந்த மேலை நாடுகளில் உள்ள எல்லா ஆண்களும் போரில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டளை இருந்தது. ஆனால் சாப்ளின் போரில் ஈடுபடாததால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. விமர்சனங்களை எல்லாம் சமாளிக்க இராணுவத்தில் சேரச் சென்றார் சாப்ளின். ஆனால் போருக்கு தேவையான உயரமும், எடையும் இல்லாததால் அவரை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்த விமர்சனங்களை போக்கும் வகையில் Liberty Bands எனப்படும் பேண்டுகளை விற்று கோடிக்கணக்கில் பணம் சேர்த்து யுத்த நிதிக்கு அளித்தார். ஒரு நாள் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நடமாடும் படிக்கட்டில்( Escalator) படுத்துக் கொண்டும் தள்ளாடிக் கொண்டும் இருப்பதை சாப்ளின் பார்த்தார். அந்தக் காட்சிகளை படத்திலும் புகுத்தினார் சாப்ளின். இந்தக் காட்சிகளால் "The Floor Walker" படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது.
History of Charlie Chaplin part 2
Post a Comment