Featured Section
Contact form
Search This Blog
Footer Copyright
Popular Posts
Nextiva
History of Bear Grylls in tamil part 2 - பியர் கிரில்ஸின் வரலாறு தமிழில் பகுதி 2
சாகசக்காரணின் சாகச தொடக்கம்:
மிக இளம் வயதிலேயே கராத்தே பயின்று அதில் பிளாக் பெல்ட் வாங்கியதால் சோதனையான சூழ்நிலைகளில் தற்காத்துக்கொள்வது எப்படியென்று அவருக்கு பிடிபடத் தொடங்கியது. வெற்றிக்களிப்போடு லண்டன் திரும்பிய பியர் கிரில்ஸை கட்டியணைத்து வரவேற்றார் காதலி சாரா. காதலியின் முன் மண்டியிட்டு இதயம் திறந்தார் பியர் கிரில்ஸ்.அந்த இன்பத் தருணங்களைக் கடந்து சாராவை திருமணம் செய்துக் கொண்டார் பியர். தொடர்ந்து அடுத்தடுத்து சாகசங்களை நோக்கியும் ஓடத் தொடங்கினார். மலையேறும் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த நண்பர் ஒருவருக்கு நிதி திரட்ட முடிவு செய்தார் பியர் கிரில்ஸ். இதற்காக தேம்ஸ் நதியில் 22 மைல் தூரம் நிர்வாணமாக கடந்துச் சென்றார், அதுவும் வீட்டில் உருவாக்கிய ஒரு சாதாரண பாத்டப் மூலம். அடுத்து 11 மீ நீளம் கொண்ட ஒரு ரப்பர் மிதவை படகு மூலமாக மிக அபாயகரமான கடல் பகுதிகளான வட அட்லாண்டிக், ஆர்க்டிக் பெருங்கடல் பகுதிகளை குழுவினருடன் ஏதும் உதவியின்றி கடந்தார். பனிமலைகளையும், பனிப்புயல்களையும் சாதரணமாக கடந்த அவர் புதிய புதிய சாதனைகளை நிகழ்த்தினார்.
Man vs Wild ன் தொடக்கம்:
2005 ஆம் ஆண்டு உலகிலேயே மிக உயரமான அருவியான வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் அருவியின் சமவெளிக்காடுகளை முதல் முதலாக பாராமோட்டார் மூலம் கடந்து செல்லும் குழுவுக்கு கிரில்ஸ் தலைமையேற்றார். இந்த குழுவானது மிக உயரமான மற்றும் மனிதக் காலடித் தடம் படாத மலைமுகடுகளை எட்ட முயற்சி செய்தது. அடுத்ததாக 25000 ஆயிரம் அடி உயரத்தில் பலூனில் பறந்தப் படியே ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் விருந்துண்டு புதிய சாதனைப் படைத்தார். இவை அனைத்தும் வெவ்வேறு நலத்திட்டங்களுக்காக நிதி திரட்டும் நோக்கிலே பியர் கிரில்ஸால் நிகழ்த்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து எவரெஸ்ட் மீண்டும் பியர் கிரில்ஸை அழைத்தது. இந்த முறை பாராஜெட் மற்றும் பாராமோட்டார் உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தின் மேல் பறக்கும் முயற்சி. 29500 அடி உயரத்தில் கடும் குளிரில், ஆக்ஸிஜன் குறைவான அபாய சூழலில் எவரெஸ்ட் சிகரத்தின பகுதிகளில் பியர் பறக்க அது சேனல் 4( Channel 4) , டிஸ்கவரி( Discovery) சேனல்களால் படம் பிடிக்கப்பட்டது. இப்படியான தன் அதிரடி சாகசங்களால் கவனம் ஈர்த்த பியருக்கு கிடைத்த முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி "Escape to the legion" . பியர் கிரில்ஸ் தலைமையிலான 11 பேர் சாஹாரப் பாலைவனத்தில் தவித்து தத்தளித்து தன்மையாக கடந்து வரும் நிகழ்ச்சி. இதற்கு அடுத்தக் கட்டமாக தான் "born survivor"நிகழ்ச்சியின் முகமாக சேனல் 4 ல் ஒப்பந்தம் செய்யப்பட்டார் கிரில்ஸ். இந்த நிகழ்ச்சியே பிற நாடுகளில் "Man vs Wild " என ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களும் மெகா ஹிட் அடித்தது. உலகம் அறிந்த சாகசக்காரனாக பியர் கிரில்ஸ் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
Man vs Wild:
தன்னந்தனி காட்டிலோ, பாலைவனத்திலோ, பனிப்பிரதேசத்திலோ, மலைமுகட்டிலோ, கடலிலோ, தீவிலோ,ஆற்று வெள்ளத்திலோ, குமுரும் எரிமலைக்கு அருகிலோ, எரியும் வனத்திலோ அல்லது மனித வாசம் அற்ற இடத்திலோ பயணித்து இயற்கையை பயன்படுத்தி உயிர்பிழைத்து பாதுகாப்பான இடத்திற்கு வருவது தான் இந்நிகழ்ச்சி. காட்டில் திரியும் போது பசித்தால் ஆதிமனிதன் போல் வேட்டையாடுவார். இவர் இந்நிகழ்ச்சியில் உயிர் பிழைப்பதற்காக செய்யும் செயல்களைப் பார்த்தால் மனிதனா இவர்? என்று யோசிக்கும் அளவிற்கு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார். இந்த கிரகத்தின் நம்பர் 1 சாகசக்காரர் என்றால் அது பியர் கிரில்ஸ் தான். இதற்கு உதாரணமும் உண்டு. ஒரு முறை Man vs Wild நிகழ்ச்சிக்காக பிரேசில் காடுகளில் கிரில்ஸ் அழைந்து திரிந்த காலம் அது. இரவு நேரத்தில் மரங்களுக்கு இடையே தொங்கு ஊஞ்சல் அமைத்து பியர் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது பியரை நோக்கி மூன்று ஓநாய்கள் வந்தன. அதில் ஒரு ஓநாயை பியர் காலைப் பிடித்து சுழற்றி அடித்தார் இதைக் கண்ட மற்ற ஓநாய்கள் தெரித்து ஓட, பாதுகாப்பு குழுவினர் வந்து பியரை பார்க்கும் போது மெல்லிய வெளிச்சத்தில் ஓநாயின் கழுத்தை படித்தப் படி இருந்திருக்கிறார் பியர். வந்தவர்கள் பியருக்கு ஆபத்து என எண்ணி ஓநாயை தாக்க முற்படும் போது தெரிந்திருக்கிறது பியரின் கடையில ஓநாய் இறந்தது. ஆபத்து வரும் போது நிதானிக்க முடியாத வேகத்தில் மிக சாதுர்யமாக அவர் எடுக்கும் முயற்சிகளே அவரை சாகசக்காரராக மாற்றியது. இதைக் கவுரவிக்கும் விதமாக "ஸ்கௌட் அசோசியேஷன்" (Scout Association) 2009 ஆம் ஆண்டு பியர் கிரில்ஸுக்கு தலைமை சாரணர் பதவியை வழங்கியது.
தனியாக காட்டில் அழைந்து திரிந்ததால் போர் அடித்ததோ என்னவோ தெரியவில்லை, உலகின் பிரபலங்களை தன்னோடு கடினமான பகுதிகளுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சியை தொடங்கினார். "Running Wild with Bear Grylls "எனப் பெயரிடப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை பல்வேறு பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சி குறித்தும் பியர் கிரில்ஸ் குறித்தும் பல சர்ச்சைகள் இருந்தாலும், இவற்றையெல்லாம் தாண்டி பியர் கிரில்ஸ்ஸின் அர்ப்பணிப்பு உணர்விற்காக அவரைக் கொண்டாடுபவர்கள் பல கோடி பேர். இவரின் சாகசங்களால் ஈர்க்கப்பட்ட இங்கிலாந்து இராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் பக்கிங்காம் அரண்மனையில் பியருக்கு விருந்தளித்து கௌவுரவப்படுத்தினார். டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமல்லாமல் , தான் கற்றுக்கொண்ட அனுபவங்களைக் கொண்டு ஸ்காட்லாந்தின் மலைப்பகுதிகளில் சர்வைவல் அகாடமி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இதன் நோக்கம் இயற்கை பேரிடர்களில் மாட்டிக்கொள்ளும் மக்கள் அவற்றை எதிர்கொண்டு சமாளித்து மீண்டு வருவது எப்படி எனப் பயிற்சி அளிப்பது. இதேப் போல பல நாடுகளிலும் அகாடமி ஆரம்பிப்பதை திட்டமாக வைத்துள்ளார் பியர். உலகின் பல இடங்களுக்கு சென்று தன்னம்பிக்கை உரைகள் ஆற்றிவரும் பியர் கிரில்ஸ் இதுவரை 11 புத்தகங்களை எழுதியுள்ளார்.
Post a Comment