Featured Section
Contact form
Search This Blog
Footer Copyright
Popular Posts
Nextiva
"Sankarapati Fort" was the training ground of the freedom fighters-விடுதலை வீரர்களின் பயிற்சி களமாக விளங்கிய " சங்கரபதிக் கோட்டை "
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து தேவக்கோட்டை செல்லும் சாலையில் இருக்கிறது இந்த சங்கரபதிக் கோட்டை அமைந்துள்ளது. காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இக்கோட்டை பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அப்போதைய இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு மிகவும் விருப்பமான இடமாக இந்த கோட்டை இருந்துள்ளது.
அக்காலத்தில் தொண்டியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் மன்னர் சேதுபதி அவர்களுக்கு 200 குதிரைகளை பரிசாக அளித்தார். அந்த குதிரைகளைப் பராமரிக்க மன்னர் சேதுபதி திறமையான ஆட்களை தேடினார். அப்போது சிவகங்கை சமஸ்தானத்தோடு நட்புறவு வைத்திருந்த மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் கூதிரைகளைப் பராமரிக்க ஆட்களைக் கேட்டார், இதையடுத்து ஹைதர் அலி தன்னிடம் தளபதியாக இருந்தவர்களில் ஒருவரான சங்கரபதி என்பவரை அனுப்பி வைத்தார்.
Click to get Nextiva free trail
மாவீரன் சங்கரபதி:
சங்கரபதி தீரம் மிக்க மனிதராகவும், யானை மற்றும் குதிரைப் படைகளில் அதிக அனுபவம் பெற்றவராகவும் விளங்கியவர். தமிழ் மற்றும் உருது மொழியிகளை நன்கு கற்றறிந்தவர். அவர் இந்த கோட்டையில் தங்கி இருந்துதான் மன்னர் சேதுபதிக் கொடுத்த குதிரைகளுக்கு பயிற்சியளித்தார். அதன் காரணமாக இந்த இடம் "சங்கரபதி கோட்டை " என அழைக்கப்படுகிறது. மேலும் மன்னர் சேதுபதி தன்னுடைய மகளான வேலுநாச்சியார்க்கு அனைத்து விதமான போர் பயிற்சிகளையும் இந்தக் கோட்டையில் வைத்து தான் கற்று தந்துள்ளார். சிவகங்கை சமஸ்தான மன்னர் முத்துவடுகநாதருக்கு தன் மகளை மணமுடித்து வைத்து இக்கோட்டையையும் சீதனமாக வழங்கியுள்ளார்.
ஆட்டக்களமாக மாறிய சங்கரபதிக் கோட்டை:
மைசூர் மன்னர் ஹைதர் அலி, மருது சகோதரர்கள் மற்றும் வேலுநாச்சியார் ஆகியோர்கள் இணைந்து ஆங்கிலேயர்களை தாக்க திட்டமிட்டனர். அந்த சமயத்தில் வேலுநாச்சியார் அரண்மனையில் இருந்த குயிலி என்றப் பெண் ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கை அழிக்க முன்வந்தார் . அதன்படி தனது உடலில் எண்ணெயைத் தடவிக் கொண்டு வெள்ளையர்களின் ஆயுதக்கிடங்கில் குதித்து, ஆயுதங்களையும் அழித்து தன் உயிரையும் அளித்துக்கொண்ட தீர்க்கப் பெண் அவர்.
அந்நேரத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடுவதற்காக , படைவீரர்கள் பல்வேறுப் போர்ப் பயிற்சிகளைப் பெற்றது இந்த சங்கரபதிக் கோட்டையில் தான் . இந்தக் கோட்டையானது கடுக்காய், கருப்பட்டி , சுண்ணாம்புப் போன்றவற்றை பயன்படுத்தி மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. தூண்கள் ஒவ்வொன்றும், நுட்பத்துடனும் , கலைநயத்துடனும் கட்டப்பட்டுள்ளன. இக்கோட்டையின் தூண்கள் தலைமுறைப் பல கடந்தப் பின்னும் இன்னும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.
சங்கரபதிக்கோட்டையின் அமைப்பு:
இந்தக் கோட்டையில் இருந்து காளையார்க் கோவில், சொர்ணகாளீஸ்வரர் கோவில் திருமயம்க் கோட்டை ஆகிய இடங்களுக்கு சுரங்கப்பாதை இருந்ததாகவும் கூறுகிறார்கள். வரலாற்று சிறப்பு மிக்க இக்கோட்டையின் முகப்பு தூண்களை வெள்ளையர்கள் பீரங்கியால் தகர்த்துவிட்டார்கள். அந்தக் கோட்டை தற்போதும் பராமரிப்பு இன்றி முட்புதர் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது.
ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது சட்டசபையில் 110 ஆவது விதியின் கீழ் சங்கரபதி கோட்டை சுற்றுலா தளமாக மாற்றப்படும் என அறிவித்தார். ஆனால் இதுவரை அதற்கான இந்தவித நடவடிக்கையும். மேற்கொள்ளப்படவில்லை.
Post a Comment