Featured Section
Contact form
Search This Blog
Footer Copyright
Popular Posts
Nextiva
History of Charlie Chaplin part 2.சார்லி சாப்ளினின் வாழ்க்கை வரலாறு பாகம் 2.
உழைப்பால் பிரபலமானவர்:
ஒரு கட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு யார் வந்தாலும் சாப்ளினை பார்க்க முடியுமா? எனக் கேட்க ஆரம்பித்தனர். சார்லினைப் பார்க்க வரும் கூட்டம் அதிகமானதை அடுத்த ஒரு விமான நிறுவனம் தொடங்கப்பட்ட செய்தியும் உண்டு. 12 படங்களுக்கு நடிக்க, பத்து லட்சம் டாலருக்கு ஒப்பந்தம் செய்ய Mutual நிறுவனம் திட்டமிட்டது. இந்த தொகையைக் கண்டு உலகமே வியந்துப் பார்த்தது. ஆனால் First National எனும் ஒரு நிறுவனம் சார்லினிடம் மற்றொரு ஒப்பந்தத்தை நீட்டியது. இதனால் அந்த நிறுவனத்துடன் சார்லின் ஒப்பந்தம் செய்து கொண்டார். இதன் மூலம் Charlie Chaplin Film Corporation எனும் நிறுவனத்தைத் தொடங்கினார் சார்லி சாப்ளின். சொந்தமாக ஸ்டூடியோ தேவைப்பட்டதால் ஹாலிவுட்டில் 5 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இதிலிருந்து சார்லியின் ஒரு சில படங்களைத் தவிர மற்ற எல்லா படங்களும் இந்த ஸ்டுடியோ வில் தான் எடுக்கப்பட்டது. அப்போது உலகப் போர் நடந்துக் கொண்டிருந்த நேரம், உலக மக்களின் சிந்தனை எல்லாம் உலகப்போரைப் பற்றி தான் இருந்தது. அந்த சிந்தனை சாப்ளின் மனதிலும் இருந்தது. இதை வைத்து படமொன்று எடுத்தார் சாப்ளின். Shoulder Arms என்ற இந்தப் படம் 30 நிமிடங்கள் ஓடியது. இதில் சிப்பாயாக நடித்திருந்தார் சாப்ளின். யுத்த பூமி என்பது சாவு, இரத்தம், குண்டுவீச்சுகள் நிறைந்திருக்கும் ஒரு இடம். அப்படிப்பட்ட இடத்திலும் மக்களை சிரிக்க வைக்க முடியும் எனக் காட்டினார் சாப்ளின்.
குடும்ப வாழ்க்கை:
இப்படி திரைப்படம் தன் வாழ்க்கை எனப் போய்க்கொண்டிருந்த சாப்ளினின் வாழ்க்கையில் அவரது 29 வயதில் காதல் மலர்ந்தது. ஒரு சிறப்பு விருந்தில் மெல்பிரிட் எனும் பெண்ணை சந்தித்தார். அவரும் ஒரு நடிகை. சாப்ளினுக்கும் அந்தப் பெண் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. அதேப் போல தான் அந்தப் பெண்ணுக்கும் சாப்ளின் மீது ஈர்ப்பு இருந்தது. அக்டோபர் 23,1918 சாப்ளினும் மெல்பிரிடும் தம்பதிகளானார்கள். இந்த தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை 3 நாட்களில் இறந்தது. இதன் காரணமாக இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட அது விவாகரத்தில் முடிந்தது. பேசும் படம் வந்தப் போது சார்லி சாப்ளின் அதை எதிர்த்தார், இதனால் பல சர்ச்சைகளுக்கு தள்ளப்பட்ட சாப்ளினுக்கு பல இடங்களில் இருந்து பேசும் படங்களில் நடிக்க கூடாது என கடிதங்கள் வந்தன. மக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் ஒரு ஊமைப் படம் , படத்தின் பெயர் "City Lights"இது ஒரு பார்வை இழந்தப் பெண்ணின் கதை. இதில் நடிக்க பெண்களை தேடிக் கொண்டிருந்தார் சாப்ளின். ஆனால் ஊமைப் படத்தில் நடிக்க யாருக்கும் விருப்பமில்லை. பின்னர் City lights ன் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் வெர்ஜீனியா. இந்தப் படம் வெற்றியை அள்ளி வீசியது.
கடின காலங்கள்:
இதற்கடுத்து இங்கிலாந்தில் இருந்து வந்து அமெரிக்காவில் பேரும் புகழும் , சொத்தையும் சேர்த்து வந்த சாப்ளினை பெரும்பாலான அமெரிக்கர்கள், அரசியல்வாதிகள் விரும்பவில்லை. மேலும் சாப்ளின் அமெரிக்க குடியுரிமையும் பெறவில்லை. இதனால் FBI, CIA போன்ற உளவு நிறுவனங்கள் சாப்ளினை உளவுப் பார்க்க ஆரம்பித்தது. city Lights படத்திற்கு பிறகு 5 ஆண்டுகள் சாப்ளின் எந்த ஒரு படத்தையும் தயாரிக்கவில்லை. ஊமைப் படக் காலமும் முடிந்துவிட்டது. புதுப்புது நகைச்சுவை நடிகர்களும் தோன்ற ஆரம்பித்தனர். Disney தயாரிப்பான "Mickey Mouse" எனும் கார்ட்டூன் உலகையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையே "மாடர்ன் டைம்ஸ்" எனும் படம் உருவானது. இந்தப் படத்தில் சாப்ளின் செய்த நகைச்சுவை சாப்ளினை மேலும் ஒரு படி உயர்த்தியது. ஆனால் இந்தப் படம் ஜெர்மனியில் ஹிட்லரால் தடை செய்யப்பட்டது. இதையொட்டி இத்தாலியிலும் முசோலினி தடை விதித்தார். 1932 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. சார்லி சாப்ளின் தனது ட்ரம்ப் கதாப்பாத்தித்தை கைவிட்டு காலத்திற்கேற்றார் போல நடித்த முதல் படம் "The Great Dictator". சர்வாதிகாரிகள் உலக சரித்திரத்தை எவ்வாறு மாற்ற முடியும் என்பதை மையமாக வைத்து இந்த புதுமையான படத்தை உருவாக்கத் தொடங்கினார். 1950 ஆம் ஆண்டு உதயமாகும் காலத்தில் சாப்ளினின் வாழ்க்கையில் பல இன்னல்கள் ஏற்பட்டன.
அமெரிக்கா பெண்களை அழிக்கும் ஒரு காமாந்தக்காரர் , இளம் பெண்களை தன் வலையில் சிக்க வைப்பவர். ஏழையாக அமெரிக்காவிற்கு வந்து ஏறத்தாழ 40 ஆண்டுகளாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து பிரிட்டிஷ் பிரஜையாக வாழ்கிறார் எனப் பல சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டார். இதன் உச்சக்கட்டமாக சாப்ளினே வெளியேறு எனப் பலகைகளில் எழுதி தியேட்டர் முன்பு கோஷமிட்டனர். 1952 ல் lime light என்றப் படத்தை தயாரித்தார் சார்லி. இந்தப் படத்தை ஐரோப்பா மற்றும் மற்ற நாடுகளில் பிரச்சாரம் செய்ய மனைவி மற்றும் குழந்தையுடன் புறப்படத் தயாரானார் சாப்ளின். அவர் அமெரிக்கா பிரஜை இல்லை என்பதால் போய் திரும்புவதற்கு 6 மாத காலம் அனுமதி வழங்கப்பட்டது. அனால் இந்த அனுமதி திடிரென்று ரத்து செய்யப்பட்டதால், அமெரிக்காவில் இருந்த சொத்துக்களை எல்லாம் விற்று விட்டு சுவிட்சர்லாந்தில் குடியேறினார். The countess from Hong Kong இந்தப் படம் தான் சாப்ளினின் கடைசிப் படம். இந்தப் படமும் இரசிகர்கள் இடத்தில் வரவேற்பைப் பெறவில்லை, இந்தப் படத்தை எடுத்ததும் தவறு என்று ஒப்புக்கொண்டார் சாப்ளின்.
1971 ல் இவருக்கு சிறப்பு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது, திரைப்படத்தை கலையாக்கிய பெருமை இவருக்கு உண்டு என அதில் குறிப்பிடப்பட்டது.
Post a Comment