-->

The History of "Princess of Hills" in Tamil. கொடைக்கானலின் வரலாறு தமிழில்

2 minute read


தமிழ்நாட்டில் தவிர்க்கமுடியாத, ஒருமுறையாவது பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்களுள் ஒன்று தான் இயற்கையின் படைப்பான கொடைக்கானல். மலைப்பிரதேசமான கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் சீரான தட்பவெப்பநிலை நிலவுகிறது. இதன் காரணமாக மக்கள் மிகவும் விரும்பும் சுற்றுலா தலமாக விளங்குகிறது. புதுமணத்தம்பதிகளுக்கு தேநிலவு செல்ல சிறந்த இடமாக உள்ளது.


History of "Princess of Hills" in Tamil

ஆதிமனிதனின் நாகரிகம் ஆற்றங்கரையோரம் வளர்ந்தது. மனிதப் பரிணாமத்தின் வளர்ச்சியால் ஆறுகளின் தோற்றிடத்தைத் தேடி சென்ற மனிதர்கள், விலங்குகள், புழுக்கள், பூச்சிகளோடு  தங்கள் வாழ்விடத்தையும் உருவாக்கிக்கொண்டார்கள். அப்படி இயற்கையோடு வாழ்வதற்கு உருவாக்கப்பட்ட பகுதிதான் கொடைக்கானல். கொடைக்கானல் என்ற நகரம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு தான் உருவானது. கொடிகள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்ததால் கொடிக்கானல் என பெயர் பெற்றது. அதுவே காலப்போக்கில் கொடைக்கானல் என ஆயிற்று. "கானல்" என்றால் அடர் காடு என பொருள்படும். 


கொடைக்கானலின் அமைப்பு:

22 ச.கி.மீ பரப்பளவு கொண்ட கொடைக்கானல், 2133 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியின் எல்லையாக வடக்கே வில்ப்பட்டி மற்றும் பள்ளங்கி கிராமங்களும்,கிழக்கு எல்லையாக பழனியில், தெற்கு எல்லையாகக் கம்பப் பள்ளத்தாக்கும், மேற்கு எல்லையாக மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கும் அமைந்துள்ளது. "இளவரசி " என்றாலே அழகானவர் எனக் கூறுவர், அதற்கேற்றாற்போல் இயற்கை எழில் கொஞ்சும் இந்த கொடைக்கானல் அதன் அழகின் காரணமாக "மலைகளின் இளவரசி" என அழைக்கப்படுகிறது

பழனிமலையின் ஒரு அங்கமான கொடைக்கானல் மேற்குதொடர்ச்சிமலையில் தான் அமைந்துள்ளது. மேற்குதொடர்ச்சிமலையின் கிழக்குப் பகுதியில் ஆனைமலைகளின் தொடர்ச்சியாக இருப்பவை பழனிமலைகள். தமிழ்நாட்டில் மேற்குதொடர்ச்சிமலையின் வட எல்லையாக நீலகிரி மலைப்பகுதிகளும், தென் எல்லையாக பொதிகை மலைப்பகுதிகளும் உள்ளன. இவற்றிற்கிடையே பழனிமலை மத்தியில் தான் அமைந்துள்ளது. 

கொடைக்கானலின் வரலாறு:

பிரிட்டிஷ் ஆட்சியில் நில அளவையாளரக  இருந்த  லெப்டினன்ட் பி.எஸ் வார்டு குழுவினர் இம்மலைப்குதியில் ஆய்வுகளை மேற்கொண்டார்கள். கி.பி 1821 ஆம் ஆண்டு ஆனைமலை, மூணாறு முதலிய மலைகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டனர். கும்பக்கரை பகுதிக்கு மேல்க்கரையிலுள்ள வெள்ளக்கவி என்ற இடத்தில் நில அளவையாளர்கள் ஓய்வுக்காக தங்கினார்கள். அவர்கள் தங்கி செல்வதற்காக பம்பாறுப் பகுதியில் ஒரு குடியிருப்பையும் கட்டினார்கள். கி.பி 1834 ஆம் ஆண்டு சென்பகனூர் அடுக்கம்  பகுதியில் மதுரை மாவட்ட துணை ஆட்சியர்  மற்றும் மதராஸ் மகாணத்தின் உறுப்பினர் சி.ஆர் காட்டன் இருவரும் குடியிருப்பை உருவாக்கினார்கள். 

லண்டன் லீனியர் அமைப்பின் தாவரவியலாளர் இராபர்ட் குவைட் 
கி.பி 1836 ஆம் ஆண்டு கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டார். ஆய்வின் போது 100க்கும் மேற்பட்ட தாவரங்களைக் கண்டறிந்தார். கி.பி 1845 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து வருகைத் தந்த மதபோதகர்கள் அக்காலத்தில் மதுரை மாவட்டத்தின் கீழ் இருந்த கொடைக்கானல் மலைப்பகுதியில் தங்கத் தொடங்கினார்கள். மதுரையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆங்கில அதிகாரிகளுக்கும் கொடைக்கானலின் இயற்கை சூழல் பிடித்துப் போனது. இதனால் பிரித்தானிய ஆதிகாரிகளுக்கு  அங்கு குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டது. கொடைக்கானல் என்ற நகரத்திற்கான தொடக்கம் அன்று அமைந்தால் 1845 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் கொடைக்கானல் உருவான நாளாகக் குறிக்கப்பட்டு ஆண்டுதோறும் மே 26 ஆம் நாள் கொடைக்கானல் நாளாக கொண்டாடப்படுகிறது. 

பின்னர் படிப்படியாக ஆங்கிலேயர்கள் ஆங்கிலேயர்கள் கொடைக்கானலில் குடியேறத் தொடங்கினார்கள். மேற்கொண்டு அவர்கள் வீடுகளையும் கட்டினார்கள் . "சர் வேர் லெவிஞ்ச்" ஏனும் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர்  தனது ஓய்வு காலத்தை கொடைக்கானலில் கழித்தார். பின்னர் 1860 ஆம் ஆண்டு கொடைக்கானல் என்றப் பெயரை ஆங்கிலேய அரசு, பதிவேடுகளில் பதிவு செய்தது. மதபோதகர்கள் , ஆங்கிலேய அதிகாரிகள், இந்தியப் பணியாளர்கள் அதிகளவில் கொடைக்கானலுக்கு வருகைப் புரிந்தனர். இதுப்போலப் படிப்படியாக கொடைக்கானலில் மக்கள் தொகை அதிகரித்து "மலைகளின் இளவரசி" எனும் கொடைக்கானல் உருவானது. 

கொடைக்கானலில்ப் பார்க்க வேண்டிய இடங்கள்:

  1. கொடைக்கானல் ஏரி
  2. பேரிஜம் ஏரி
  3. பிரையன்ட் பார்க். 
  4. குறிஞ்சி ஆண்டவர் கோயில். 
  5. குணா குகைகள். 
  6. தொலைநோக்கி காப்பகம். 
  7. கவர்னர் தூண். 
  8. மதிகெட்டாண் சோலை. 
  9. பியார் சோலா நீர்வீழ்ச்சி மற்றும் சில சிறிய நீர்வீழ்ச்சிகள். 
  10. செண்பகனூர் அருங்காட்சியகம். 
  11. அப்பர் லேக். 
  12. வெள்ளி நீர்வீழ்ச்சி. 
  13. படகுத்துறை. 
  14. அமைதிப் பள்ளத்தாக்கு
  15. கால்ப் மைதானம். 

கொடைக்கானலின் சிறப்புகள்:

  • கொடைக்கானல் "மலைகளின் இளவரசி" என அழைக்கப்படுகிறது. 
  • கொடைக்கானலில் காணப்படும் மலைத்தொடர்கள் "பழனிமலைகள்" என்று அழைக்கப்படுகிறது. 
  • 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்ச்செடிகள் வளர்வதற்கு ஏற்ற சூழல் இங்கு நிலவுகிறது. இப்பகுதியில் கடைசியாக 2006ஆம் ஆண்டு குறிஞ்சி பூக்கள் பூத்தன. 
  • குறிஞ்சி மலர்கள் காரணமாக இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோவில் எனப் பெயருண்டு.