Featured Section
Contact form
Search This Blog
Footer Copyright
Popular Posts
Nextiva
History of Cauvery River in Tamil! - காவிரி நதியின் வரலாறு தமிழில்.
"காவிரி" இது வெறும் வார்த்தை இல்லை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி என மூன்று மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் வாழ்வாதாரம். இப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கூடிய நதியாக இக்காவிரி உள்ளது. இந்த நதியோடு மிகப்பெரிய அரசியல் பிண்ணிப் பிணைந்துள்ளது. இக்காவிரியின் பிரச்சினை நூற்றாண்டு வரலாறுக் கொண்டது. இந்த பதிவில் விரிவாகக் காண்போம் அதை.
காவிரியின் வரலாறு:
கி.பி 1870 ல் மைசூர் சமஸ்தாணத்திற்கும், சென்னை ராஜ்தானி க்கும் இடையில் காவிரி நீரைப் பங்கிடுவது தொடர்பாக பிரச்சினை எழுந்தது. இது தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இறுதியில் பயனில்லாமல் ஆனது. இறுதியாக கி.பி 1892 ஆம் ஆண்டு ஊட்டியில் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சு வார்த்தையின் மூலம் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் தான் காவிரி நதிநீர் தொடர்பாக முதல் முறையாக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம். இவ்வொப்பந்தத்தின் படி கர்நாடகாவில் உள்ள நீர்நிலைகளை மூன்றாக அட்டவணைப்டுத்தினார். நதிகள் எல்லாம் அட்டவணை ஒன்றிலும், அதன் பிறகு உள்ள நீர்நிலைகளை அட்டவனை இரண்டிலும், அதன்பின்னர் உள்ள சிறிய நீர் ஆதாரங்களை அட்டவனை கடைசியிலும் அட்டவனைப்படுத்தினர்.
இந்த ஒப்பந்தத்தின் படி அட்டவனை ஒன்றில் இடம் பெற்றிருந்த எந்த ஒரு நதியில் கர்நாடாக அரசு அணைக் கட்டினாலும் அதை சென்னை மாகாணத்தின் ஒப்புதலோடு தான் கட்டவேண்டும். இதைத் தொடர்ந்து 1906 ஆம் வருடம் மைசூர் சமஸ்தானம் கண்ணம்பாடி என்ற இடத்தில் கிருஷ்ணராஜா சாகர் அணையை கட்ட வேண்டும் என எண்ணி சென்னை மாகாணத்தின் ஒப்புதலைப கேட்டனர். இதற்கு சென்னை மாகாணம் ஒப்புதல் அளிக்கவில்லை. இப்பிரச்சினை உடனடியாக பிரிட்டிஷாரிடம் சென்றது, இதனைத் தொடர்ந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ,மைசூர் சமஸ்தானம் கிருஷ்னராஜா சாகர் அணையை கட்டிக்கொள்ளலாம் என தீர்ப்பளித்தார். இதற்காக சென்னை மாகாணமும் ஒரு அணைக் கட்டிக்கொள்ளலாம் என்றார். இதன் மூலம் தமிழகத்தில் கட்டப்பட்ட அணைதான் மேட்டூர் அணை.
தீர்ப்புகள்:
1924 ஆம் ஆண்டு மைசூர் சமஸ்தானம் கிருஷ்ண ராஜா சாகர் அணையை கட்டியது. ஆனால் அதற்கு பிறகும் இந்த காவிரி நதிநீர் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. தொடர்ந்து காவிரி நதிநீரைப் பங்கிடுவதில் கர்நாடகா அரசிற்கும், தமிழகத்திற்கும் பிரச்சினை இருந்துக் கொண்டே தான் இருந்தது. இறுதியாக 1991 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான தீர்ப்பு கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதற்கிடையில் இடைக்கால தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. இத்தீர்ப்பில் கர்நாடகா அரசு தமிழகத்திற்கு 205 டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்கள். இதைத்தொடர்ந்து வந்த இறுதித்தீர்ப்பில் 192 டி.எம்.சி கொடுத்தால் மட்டும் போதுமானது என்றது.
மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகு தமிழக அரசு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டனர். இதன் தொடர்ச்சி தான் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கு . இவ்வழக்கின தீர்ப்பு: 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின் சாரம்சங்களை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் மீண்டும் நீரின் அளவை 177.5 டி. எம். சி யாக குறைத்து உத்தரவிட்டது. காவிரி வரலாற்றைப் பொறுத்து வரையில் தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது. காவிரி நதியின் பெரும்பகுதி தமிழ்நாட்டில் தான் பாய்கிறது. டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்குவது புனிதக் காவிரியே.
Post a Comment