Featured Section
Contact form
Search This Blog
Footer Copyright
Popular Posts
Nextiva
History of IPL in Tamil! ஐபிஎல் ன் வரலாறு தமிழில்
ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகில் சர்வாதிகாரியாக இருந்தது ஆஸ்திரேலியா. இதற்கு காரணம்,தாங்கள் நினைத்த நேரத்தில் ஒரு நாட்டோடு தொடரை நிர்ணயிக்க முடியும். ஐசிசி போட்டிகளில் தங்களுக்கு சாதகமாக போட்டி அட்டவணையை மாற்றி அமைக்க முடியும் என அந்த சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியா சந்தித்தது ஏராளம். இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்து சுமார் 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இன்று அதே இடத்தில் அசைக்க முடியாத சர்வாதிகாரியாக நிற்கிறது இந்தியா. இதற்கு காரணமாக பல விவகாரங்களைக் கூற முடியும், அதில் முக்கியமானது IPL எனும் இந்தியன் பிரீமியர் லீக் .
IPL ன் ஆரம்பம் :
IPL என்பது இன்று இந்திய மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலம். இதற்கு அடிப்படையாக அமைந்தது ICL எனும் கிரிக்கெட் தொடர். 2002 ஆம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இருபது ஓவர் போட்டிகளை அறிமுகப்படுத்தியபோது அவற்றின் தாக்கம் இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் இருக்கவில்லை. இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டியை ஜீ குழுமத்தினர் ஆரம்பித்தனர். இந்த அமைப்பிற்கு தலைவராக்கப்பட்டார் கபில்தேவ். அவரது இந்த நடவடிக்கை ப BCCI ல் புதிய குழப்பத்தை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து BCCI மற்றும் ICC க்கு எதிராக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு கபில்தேவ் மேல் சுமத்தப்பட்டது. இதனால் இந்தியக் கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியிலிருந்து கபில்தேவை நீக்கியது BCCI. அதே நேரத்தில் ICL ல் ஆடும் ஆட்டக்காரர்களுக்கு BCCI இந்திய அணியில் ஆடுவதற்கு தடை விதித்தது. 2007 ஆம் ஆண்டு ICL தொடங்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு அடுத்த ஆண்டே IPL எனும் இந்தியன் பிரீமியர் லீக்கை தொடங்கியது BCCI. IPL ன் தலைவராக்கப்பட்டார் லலீத் மோடி.
IPL அணிகளின் உருவாக்கம்:
IPL ஐ இருபது ஓவர் ஆட்டங்களாக நடத்த முடிவு செய்த BCCI உலக அளவிலிருந்து நட்சத்திர வீரர்களை இழுக்கும் பணி தீவிரப்படுத்தபட்டது. சென்னை, மும்பை, பஞ்சாப், டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் , இராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய நகரங்களைக் கொண்டு அணிகள் பிரிக்கப்பட்டன. சென்னை அணி அப்போதைய இந்திய இருபது ஓவர் அணியின் கேப்டனாக இருந்த டோனியை ஏலத்தில் எடுத்து சென்னை அணியின் கேப்டனாக நியமித்தது. அம்பானி, சீனிவாசன், மல்லையா போன்ற தொழில் அதிபர்களும், ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா, சில்பா ஷெட்டி போன்ற சினிமா நட்சத்திரங்களும் IPL அணிகளை ஏலம் எடுத்து உரிமையாளர்களாக மாறியிருந்தனர்.மிகப் பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய IPL முதல் சீசனிலேயே பெரும் அளவில் பிரபலமானது. IPL தலைவரான லலித் மோடியின் வணிக மூளை BCCI யை பணக்கார வீரியமாக மாற்றியது. நடிகை, நடிகர்களின் வரவு, சியர் லீடர்ஸ் என IPL ல் சர்வதேச அளவில் பிரம்மாண்டம் பெற்றது.
IPL கடந்து வந்த சர்ச்சைகள்:
IPL ஐ வணிக ரீதியாக பிரம்மாண்டமாக்கி காட்டிய லலித் மோடி, அதன் மீது கரைபடமால் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டாமல் போனார். அதன் விளைவு IPL தொடரின் இரண்டாவது சீசனிலேயே சூதாட்டப் புகார் வெடித்தது. IPL ன் இரண்டாவது சீசன் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த IPL போட்டிகளின் போது ஆஸ்திரேலியாவின் முன்னனி வீரர் உட்பட மொத்தம் 27 வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுப்பட்டதாக புகார்கள் பறந்தன. ICC யின் ஊழல் தடுப்புப் பிரிவைப் பயன்படுத்தி முறைகேடுகளை தடுக்கும் வாய்ப்பு இருந்தும் லலீத் மோடி அதைப் புறக்கணித்தார் என்ற செய்திகள் பறந்ததால் வேறு வழியின்றி லலீத் மோடி மீதான புகார்களை விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது BCCI. இந்த விசாரணையில் IPL ஒளிபரப்பும் உரிமத்தில் 500 கோடி ரூபாய் முறைக் கேடு நடந்திருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் லலீத் மோடி IPL தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்து.
பண மோசடி:
இதனைத் தொடர்ந்து மற்றொரு சிக்கலிலும் சிக்கிக் கொண்டது IPL. 2011 ஆம் ஆண்டுக்கான IPL சீசனில் இரண்டு புதிய அணிகளை அறிமுகப் படுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. புனே மற்றும் கொச்சின் நகரங்களை வைத்து இரண்டு புதிய அணிகளை அறிவித்தது IPL நிர்வாகம். இதில் புனே அணியை 1702 க் கோடிக்கு சாஹாரா குழுமம் வாங்கியது. கொச்சின் அணியை RENDEZVOUS எனும் விளையாட்டு அமைப்பு 1533க் கோடிக்கு ஏலம் எடுத்தது. இதில் குறிப்பிட்ட பங்குகளை வாங்கியிருந்தார் சுனந்தா புஷ்கர். RENDEZVOUS விளையாட்டு அமைப்பின் பின்னனியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசிதரூர் இருப்பதாகவும் அதனால் தான் கொச்சி அணியை உருவாக்குவதிலும், அதை RENDEZVOUS வாங்குவதிலும் சசி தரூர் ஆர்வம் காட்டினார் என சர்ச்சை கிளம்பியது. RENDEZVOUS நிறுவனம் கொச்சின் அணியை ஏலம் எடுத்தப் போது அதில் சுனந்தா புஷ்கர் பங்குதாரர் என குறிப்பிடவில்லை எனவும் ஏலம் எடுத்தப் பின்பு அதில் பங்குதாரர்ராக இருந்த ஒருவர் சுனந்தா விற்கு தனது 70 கோடி பங்கை சுனந்தா விற்கு மாற்றிக் கொடுத்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மூலம் சசி தரூர் மீதான குற்றச்சாட்டு மேலும் வலுவடைய தொடங்கியது. சசி தரூர் க்காக அவரின் காதலி சுனந்தா விற்கு பங்குகள் மாற்றப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் குவிந்தன. இவர் இக்குற்றசாட்டுக்காக அளித்த பதிலையும் எதிர்கட்சிகள் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து சுனந்தா தனது 70 கோடிப் பங்கினை விட்டுக்கொடுத்தார். இறுதியாக தனது பதவியை இராஜினாமா செய்தார் சசி தரூர். இச்சர்ச்சையிலும் லலீத் மோடி ஈடுப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அருண் ஜேட்லி, ஜோதி ஆதித்யா சிந்தியாவைக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையை தாக்கல் செய்தது. மொத்தம் 134 பக்க அறிக்கையில் லலீத் மோடி மீது அடுக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டன. ஊழல்,முறைகேடு, BCCI க்கு அவப்பெயர் தேடித்தந்தது என லலீத் மோடி மீது எட்டு புகார்கள் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து லலீத் மோடி இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இருந்து நீக்கப்படுவதாகவும், எதிர் காலத்தில் அவர் கிரிக்கெட் அமைப்பில் எந்தப் பதவியிலும் அமறமுடியாது என அறிவித்தது BCCI.
சூதாட்டப் புகார்:
இப்படி சர்ச்சைகள் வெடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அடுத்த சர்ச்சையில் சிக்கியது IPL. 2013 ஆம் ஆண்டு வெளியான சூதாட்டப் புகார்கள் மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகள் ஓய சுமார் ஐந்து ஆண்டுகள் ஆனது என்பதுதான் நிதர்சனம். மேடச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஸ்ரீ சாந்த், அங்கித் சவான், அஜித் சாண்டிலா ஆகியோர் டெல்லி போலீசார் கைது செய்தத மூலம் அதிர்ச்சியில் உறைந்தது கிரிக்கெட் இரசிகர் பட்டாளம். இது மட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான நபர்களுள் ஒருவரான குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகார் காரணமாக மும்பை போலிசாரால் கைது செய்யப்பட்டார். இவர் அப்போதைய BCCI தலைவரும் சென்னை அணியின் நிறுவவம் ஆன சீனிவாசனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் BCCI தலைவர் சீனிவாசன் குருநாத் மெய்யப்பன் மீதான குற்றச்சாட்டு குறித்து BCCI முறையான நடவடிக்கை மேற்கொள்ளும் என உறுதியளித்தார். இதுதொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த ஒய்வுப் பெற்ற முன்னாள் நீதிபதி முட்கல் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை அறிவித்தது BCCI. மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், அசாம் கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த நிலாய் தத்தா ஆகியோரும் இக்குழுவில் சேர்க்கப்பட்டனர். நான்கு மாதங்கள் அவகாசத்திற்கு பிறகு 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி இக்குழுவால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வறிக்கையில் குருநாத் மெய்யப்பன், மற்றும் இராஜ் குந்தர் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு தண்டனை வழங்கும் உரிமம் லோதா குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் ஒருமாத காலம் ஆலோசனைகளுக்கு பின் சென்னை, இராஜஸ்தான் அணிகளுக்கு IPL ஆட இரண்டு ஆண்டுகள் தடையும், குருநாத் மெய்யப்பன், இராஜ் குந்தரா ஆகியோர்களுக்கு வாழ்நாள் தடையும் என லோதா கமிட்டி தண்டனை வழங்கியது.
இவ்வளவு தடைகள் இருந்தப் போதிலும் IPL இந்தியாவில் வீரநடைப் போடுவதற்கு காரணம் இரசிகர்களும், இந்தியர்களின் கிரிக்கெட் மீதான காதலும் தான். IPL தான் கிரிக்கெட் எனும் விளையாட்டின் உலக அரங்கில் இந்தியாவை அமர வைத்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் கிரிக்கெட் தரம் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டு பல வீரர்களின் கனவான தேசிய அணிக்காக ஆடும் கனவினை நனவாக்கியது இந்த ஐபில் தான்.
Post a Comment