The history of a great man can be an inspiration to many people. And the history of that man will remember him even after his death.
Featured Section
featured/recent
Contact form
Search This Blog
Footer Copyright
Design by - Blogger Templates | Distributed by Free Blogger Templates
Popular Posts
Nextiva
by
Manjunath
UnBeatable IPL Records in the History of IPL-நினைத்தாலும் மறக்கவே முடியாத ஐபிஎல் சாதனைகள்! No one can beat this IPL Records
2 minute read
இன்றைய காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக அதிக வசூல் செய்யும் கிரிக்கெட் தொடர் தான் ஐபிஎல்(இந்தியன் பிரீமியர் லீக்). ஐபிஎல் ன் முழு வரலாற்றை பொறுத்த அளவில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் ,அதில் பல சாதனைகள் முறியடிக்க கூடிய வகையில் தான் இருந்துள்ளது ஆனால் அதிலும் சில சாதனைகள் யாராலும் தொட முடியாத சாதனைகளாக இன்றும் தொடர்கிறது.அம் முறியடிக்க முடியாத சாதனைகளை இப்பதிவில் காண்போம்
ஐபிஎல் ல் முறியடிக்க முடியாத சாதனைகள்:
1.விராட் கோலியின் சாதனை;
ஐபிஎல் ல் யாரும் இன்றுவரை முறியடிக்க முடியாத இச்சாதனை 2016 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. ஆம் தனியொரு சீசனில் தனி ஒரு வீரரால் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச ரன் 973 ஆகும். இச்சாதனையை இதற்கு முன்னரும், இதற்கு பின்பும் யாரலும் முறியடிக்க முடியவில்லை. இச்சாதனைக்கு சொந்தக்காரர் யாரென்றால் "ரன் மெஷின்" என்றழைக்கப்படும் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி தான். இவர் 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மட்டும் 4 சதங்கள், 7அரைசதங்கள் உட்பட 973 ரன்களை குவித்து இச்சாதனையை நிகழ்த்தினார்.இது இன்றும் தொடர்கிறது.
2.தல தோனியின் சாதனை;
இரண்டாவது சாதனையாக நாம் பார்க்க இருப்பது அதிக முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணியின் சாதனை, உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் அணி தான் சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த அணி ஐபில் ன் ஆரம்பம் முதலே மகேந்திர சிங் தோனியின் தலைமையில் தான் விளையாடி வருகிறது. இவரின் தலைமையின் கீழ் மட்டும் சென்னை அணி இதுவரை 9 முறை இறுதிப் போட்டியிக்கு முன்னேறியுள்ளது. 11 முறை playoff சுற்றை எட்டியுள்ளது.
3.அமித் மிஷ்ரா வின் சாதனை;
மூன்றாவது ஆக நாம் பார்க்க இருக்கும் சாதனை, ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஹாட்ரிக் எடுத்தது.ஆம் இந்த சாதனையை ஸ்பின்னர் அமித் மிஷ்ரா தான் நிகழ்த்தியுள்ளார், ஆம் 2008 , 2011 , 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன்களில் ஹாட்ரிக் எடுத்ததன் மூலம் இச்சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் இச்சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை.
4. கெயிலின் சாதனை;
அடுத்ததாக ஐபிஎல் வரலாற்றில்,தனிஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் சாதனை, இச்சாதனை சர்வதேச அளவில் நிகழ்வதும், முறியடிக்கப்படுவதும் சாதாரணம் தான், ஆனால் ஐபிஎல் ல் தனி ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் 175 ஆகும். இது 20 ஓவரில் ஒரு அணி அடிக்கும் ஸ்கோர் ஆகும், இச்சாதனையை தனி ஒரு வீரராக நிகழ்த்தியது "த யுனிவர்சல் பாஸ்" கிறிஸ் கெய்ல் தான். இவர் 2013 ஆம் ஆண்டு சஹாரா பூனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 175 (66) விளாசினார் இதில் 17 சிக்சர்களும் அடங்கும். இதுவே ஐபிஎல் வரலாற்றில் இன்று வரை தனியொரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
5.சிறந்த வீரர்களின் சாதனை:
ஐந்தாம் சாதனையாக நாம் பார்க்க இருப்பது, இரண்டு வீரர்களுக்கு இடையேயான பார்ட்னர்ஷிப் சாதனை தான். ஆர் சி பி (RCB) என்றாலே நம் நினைவுக்கு வருவது இரண்டு முகங்கள் தான் ஒன்று விராட் கோலி, மற்றொன்று
Mr 360 எனும் ஏபிடி வில்லியம்ஸ். இவர்கள் இருவரும் இணைந்து 2016 ஆம் ஆண்டு ஐபில் சீசனில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பார்ட்னர்ஷிப் அமைத்து 229 ரன்களை சேர்த்ததே இன்றும் ஐபிஎல் வரலாற்றில் உடைக்க முடியாத சாதனையாக திகழ்கிறது. இப்போட்டியில் இவர்கள் இருவரும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment