-->

History of Zen Founder Bodhidharmar in tamil part 2- வீரத்துறவி போதிதர்மரின் வரலாறு தமிழில் பாகம் 2

4 minute read

 

சீனாவை நோக்கி பயணம்:

தன் தந்தையின் இறப்பிற்குப் பின், சில நாட்களிலேயே மகததேசத்தை நோக்கி தன் பயணத்தை தொடங்கினார் புத்ததர்மர். மகததேசத்தை அடைந்த அவர் தனது குரு பிரஜினதாராவை சந்தித்து நடந்தவற்றை கூறி தனக்கு சன்னியாச தீட்சை வழங்கும் படி வணங்கினார். அதே ஆண்டில் புத்த பூர்ணிமாவில் தனது சீடன் புத்ததர்மருக்கு சன்னியாச தீட்சை வழங்கினார் பிரஜினதாரா. அப்போது தான் புத்ததர்மர் எனும் அவருக்கு  போதிதர்மர் எனும் சன்னியாச நாமம் சூட்டப்பட்டது, ஆண்டுகள் செல்ல செல்ல பிரஜினதாராவின் முதன்மை சீடரானார் போதிதர்மர். அப்போது சீனாவை ஆண்ட பேரரசர் லியாங் வூ  என்பவர் மதக்குழப்பங்களால் சிக்கி தவித்த சீன மக்களுக்கு  போதனை செய்து நல்வழிப்படுத்த ஒரு துறவியை அனுப்புமாறு பிரஜினதாராவிடம் நேரில் முறையிட்டார். சீனப் பேரரசின் கோரிக்கையை ஏற்ற பிரஜினதாரா, போதிதர்மரை அழைத்து, மக்களுக்கு சேவை செய்ய காலம் அழைக்கிறது என்று கூறி, போதிதர்மரை சீனாவை நோக்கி பயணத்தை தொடங்கச் சொன்னார். 

ஆனால் அக்காலத்தில் சீனாவில் கன்பூசியஸ் மதமும், தாவோ மதமும் சீனாவில் பிரபலமாக இருந்தது.  கன்பூசியஸ் மதம் மனிதனின் பாதையாகவும், தாவோ மதம் சொர்க்கத்தின் பாதையாகவும் இருந்தது. புத்த மதம் சீனாவில் நுழைவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பாகவும், ஜென் மதம் சீனாவில் நுழைவதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவும் அவை தோற்றம் பெற்றிருந்தன. இந்தியாவில் சைவமும், வைணவமும் சண்டையிட்டு கொண்டது போல், சீனாவில் தாவோ மற்றும் கன்பூசியஸ் தத்துவங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் சீனாவில் பெரும் சச்சரவுகளை உண்டாக்கின. மதக்குழப்பங்களில் சீன மக்கள் இருப்பதைக் கண்ட போதிதர்மர், கி.பி 527 ஆம் ஆண்டு சீனாவின் நான்கிங் நகரத்திற்கு சென்று சேர்ந்தார். அவரைப் பேரரசர் வூங் வரவேற்றார். தொடர்ந்து சீனாவின் வடக்குப்பகுதியை நோக்கி பயணத்தை தொடங்கி ஷாவுலின் எனும் நகரத்தை அடைந்தார். அங்குள்ள புத்த கோவில்களைப் பார்வையிட்ட அவர், அங்குள்ள புத்த துறவிகளை கண்டு எரிச்சலடைந்தார் , காரணம் மதக் கோட்பாடுகளை பின்பற்றாமல், தேவைக்கேற்ப அவைகளை மாற்றியமைத்து கொண்டிருந்தார். கொள்ளைக் கூட்டங்களுக்கு பயந்து மடங்களில் பயந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வறுமையையும் பஞ்சமும் நிறைந்த சாவுலின் நகரில் அதிகரித்திருந்த கொள்ளைகூட்டங்கள் மக்களைக் கொன்று  உணவுகள் உட்பட பல பொருள்களை சூறையாடி வந்தனர். ஒரு முறை அந்தக் கொள்ளை கும்பலை தனி ஆளாக விரட்டியடித்தார் போதிதர்மர். 


History of Zen Founder Bodhidharmar in tamil


சீனாவில் குங்பூ:

இதன் தொடர்ச்சியாக  போதிதர்மர் போல வீரத்துறவியாக மாற பலரும் அவரை தங்களது குருவாக ஏற்றுக்கொண்டனர். அச்சத்துடனும், கோழைத்தனத்தின் உச்சத்திலும் இருந்த அவர்களுக்கு, இந்தியாவில் தான் பயின்ற போர்க் கலைகளை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க தொடங்கினார். வர்மக்கலையில் சில திருத்தங்களை செய்து ஒரு தற்காப்பு போர்முறையை உருவாக்கினார். டிராகன், புலி, சிறுத்தை, பாம்பு, நாரை போன்ற ஐந்து விலங்குகளின் குணாதிசயங்களைக் கொண்டு போரிடும் அந்த முறை குங்பூ என்று அழைக்கப்பட்டது. போதி தர்மர் அவர்களுக்கு தற்காப்பு கலையை கற்றுக் கொடுத்ததுடன் மருத்துவத்திலும் அவர்களை தேர்ச்சி பெறச  செய்தார் , காரணம் அக்காலத்தில் இருந்த சுகாதார சீர்கேட்டால் பலரும், உயிர்கொல்லி நோய்களுக்கு கொத்து கொத்தாக இறந்தனர். போதிதர்மரின் பயிற்சிக்கு பின்னர், அதாவது சரியாக 3 ஆண்டுகளில் அந்த துறவிகள் எந்த சூழலையும் கையாளும் திறமையைப் பெற்றனர். புத்த ஆலயங்களில் தங்கி இருக்காமல், கொள்ளைக்காரர்களை துவம்சம் செய்து, நாட்டின் மற்றப் பகுதிகளிலும் குங்பூ கலையை கற்றுக்கொடுத்தனர். அதுவரை போதிதர்மரை இந்தியாவில் இருந்து வந்த  ஒரு சாதாரண துறவியாக தான் எண்ணியிருந்தனர். அவர் பல்லவ தேசத்தின் இளவரசர் என்பதும், தன் அரியாசனத்தை உதறி தள்ளி வந்தவர் என்பதும் யாருக்கும் தெரியாது. தனக்கு காணிக்கையாக வரும் செல்வங்களை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவினார். இதன் காரணமாக இவரது புகழ் சீனா முழுவதும் பரவியது. போதிதர்மர் போர்க் கலையிலும், மருத்துவத்திலும் தேர்ச்சிப் பெற்றவராக இருப்பினும், அவர் புத்த மதத்தின் படியே தன் வாழ்க்கையை வாழ்ந்தார். 

ஜென் மதம், இறுதிக்காலமும்:

அவருக்கு கிடைத்த நேரத்தின்  பெரும்பகுதியை புத்தரின் தத்துவங்கள் குறித்த ஆராய்ச்சியிலும், தியானத்திலுமே அவர் செலவிட்டார், இதன் பலனாக ஜென் எனும் புதிய மதத்தை தோற்றுவித்தார். போதிதர்மரின் ஜென் மதம் சீனாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இவ்வழியாக சீனர்கள் கோழைத்தனத்தில் இருந்து மீண்டு, தங்கள் வாழ்க்கையை எழுச்சியோடு வாழத் தொடங்கினார்கள். தன் குரு பிரஜினதாரா தன்னை அனுப்பிய, நோக்கம் நிறைவேறியதாக கருதிய போதிதர்மர், இமயமலை நோக்கி செல்வதாக அறிவித்தார். இதனால் அவர்களது சீடர்கள் அதிர்ந்தனர். போதிதர்மர் புறப்படும் செய்தி சாவுலின் தேவாலயத்தையும் தாண்டி, பக்கத்து ஊர்களுக்கும் பரவியது. இதன் காரணமாக, போதிதர்மரால் குங்பூ பயிற்றுவிக்கப்பட்ட பல மாணவர்களும், அவரால் உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து குணமான பலரும் சாவுலின் முன்பு கூடினர். தனது பூர்வீகத்தையும், தான் இங்கு வந்த காரணத்தையும் போதிதர்மர் அவர்களிடத்தில் எடுத்துரைத்தார். இதையும் ஏற்க மறுத்த அம்மக்கள் போதிதர்மரிடம் போக வேண்டாம் என மன்றாடினர். தன் முடிவில் மாறாக்கருத்துடன் இருந்தார் போதிதர்மர். பாசமிகுதியால் சீன மக்கள், அவர் உடலையாவது எம் சீன மண்ணில் வைத்துக்கொள்ளலாம் என எண்ணினார்கள். அவரைக் கொள்ள உணவில் விஷம் வைத்து பரிமாற திட்டம் தீட்டப்பட்டது, ஆனால் ஞானியான போதிதர்மர் இதனை முன்கூட்டியே அறிந்தார். போதிதர்மர் தான் கற்றுக்கொடுத்த மக்களை குழந்தைகளாக எண்ணியதால் அவர்கள் தோற்றுப்போவதில் இவருக்கு சிறிதும் மனமில்லை. ஆனால்  சீடர்களில் முதன்மையானவரை அழைத்த போதிதர்மர்,  அவர்கள் திட்டமிட்டதை  சரியாக கூறியதும் அச்சீடர் அதிர்ந்தார். ஒரு குருவாக தான் வைக்கும் கடைசி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமானால், நான் சொல்வதை சரியாக செய்ய வேண்டும் எனக் கூறினார். அவர் பதப்படுத்தப்பட்ட ஒரு மூலிகையை அவரிடத்தில் கொடுத்து, இது கொடிய விஷமுல்ல ராஜநாகத்தின் விஷயத்தையும் முறியடிக்கும் தன்மையுடையது எனக் கூறினார். இதை தனக்கு விஷமளிக்கப்பட்ட 18 மணி நேரத்திற்குள் செயல்படுத்த வேண்டும் எனக் கட்டளையிட்டார். 

அன்றிரவு அவர் விஷம் கலந்த உணவை உட்கொண்டார், நினைத்தது போல விசம் ரத்தத்தில் கலந்ததால் மயக்கம் அடைந்தார். மெல்ல அவரது உயிர் அவரது உடலை விட்டு பிரிந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அவரது நாடித் துடிப்பு நின்றதும், செய்தக் குற்றத்திற்காக செய்வதறியாது நின்ற மக்கள் கூட்டம் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தது. மக்கள் கூட்டம் கலைந்ததும் ,போதிதர்மரின் சீடர் அவர் கூறிய படி திட்டத்தை செயல்படுத்தினார். போதிதருமரின் மறைவால் சோகத்தில் மூழ்கியது சாவுலின் , சில நாட்கள் கழித்து ஆற்றங்கரையோரம் காலில் ஒற்றை செறுப்புடன் போதிதர்மர் செல்வதை கண்டு எல்லைக்காவலாளி அதிர்ச்சியானார். அவரிடம் சென்று நீங்கள் எப்படி உயிருடன் இருக்கிறீர்கள் என கேட்டார் காவலாளி. அதற்கு போதிதர்மர் போய் என்னுடைய கல்லறையை திறந்துப் பார் என அர்த்தம் குறைந்த புன்னகையுடன் கூறினார். நாட்டு மக்களுடன் சென்ற கல்லறையை திறந்துப் பார்த்தப் போது அவரின் ஒற்றைச் செருப்பு மட்டுமே அதில் இருந்தது. இருப்பினும் போதிதர்மர் இமயமலை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. புத்தரை போல வாழ்ந்து இயேசுவைப் போல இறுதிகாலத்தை கொண்டவர் போதிதர்மர். ஒற்றைத் தமிழனாக இன்றைய வல்லரசு சீனாவிற்கு அஸ்திவாரம் இட்டவர் போதிதர்மர்.


 History of Bodhidharmar in Tamil part 1