Featured Section
Contact form
Search This Blog
Footer Copyright
Popular Posts
Nextiva
History of Cristiano Ronaldo in Tamil part-2, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வரலாறு தமிழில் பாகம்-2
இந்தப் பதிவில் நாம் சாதனை நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வரலாற்றின் இரண்டாம் பாகத்தை பார்க்க உள்ளோம்.
விருதுகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்த நிலையில் தான், தன்னுடன் ஆகச்சிறந்த போட்டியாளரான மெஸ்ஸியின் கூடாரத்திற்குள் குறிப்பெயர் நினைத்தார் ரொனால்டோ. அதன் படி 2009 ஆம் ஆண்டு ஐரோப்பாவின் மாபெரும் அரணாக விளங்கிய தனது கனவு அணியான "ரியல் மேட்ரிட்" அணிக்கு 742 கோடிக்கு ஒப்பந்தமானார். கால்பந்து வரலாற்றில் அதுவரை யாரும் போகாத விலைக்கு வாங்கப்பட்டார் ரொனால்டோ. 2009 ஆம் ஆண்டு ஸ்பெயினுக்கு குடிப்பெயர்ந்த ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணிக்காக களமிறங்கி ஐரோப்பா மைதானங்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். லா லீகா தொடரில் இடம்பெற்ற ரியல் மாட்ரிட் அதே லீக்கில் இடம்பெற்ற பார்சிலோனா அணியுடன் மோதிக்கொள்ளும் போட்டி இடம்பெற்றது. பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரான மெஸ்ஸியும் , ரொனால்டோவும் நேருக்குநேர் நேர் மோதிக்கொண்ட முதல் போட்டி அதுதான். கால்பந்தில் ரொனால்டோவின் ரசிகர்களும், மெஸ்ஸியின் ரசிகர்களும் மோதிக்கொள்வது தொடர்கதையானது. இருந்தாலும் மெஸ்ஸிக் குறித்து உணர்வுப்பூர்வமாக பேசி மெஸ்ஸி ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார் ரொனால்டோ. கடந்த பதினைந்து ஆண்டுகளாக கால்பந்து உலகில் எனக்கு மிக சிறந்த போட்டியாளன் மெஸ்ஸி . எங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் ஆரோக்கியமான மோதல் தான் என்னை இன்னும் தீவரமாக விளையாடச் செய்கிறது என்றார் மெஸ்ஸி.
எண்ணற்ற சாதனைகள்:
புகழ்பெற்ற ஐரோப்பா "சாம்பியன்ஸ் லீக்" தொடரில், மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி தனது அசாத்தியமான 128 கோல்கள் மூலம் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் ரொனால்டோ. கால்பந்து உலகின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் "பாலன் டீ ஒர்" விருதை தட்டி செல்வதில் ரொனால்டோ, மெஸ்ஸி இடையே கடும் போட்டி நிலவும். இதுவரை ரொனால்டோ ஐந்து முறையும், மெஸ்ஸி ஆறு முறையும் "பாலன் டீ ஓர் " விருதை வென்றுள்ளனர். இருந்தாலும் உலகப் பிரபலங்களின் பட்டியலில் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி தொடர்ந்து கெத்து காட்டி வருகிறார் ரொனால்டோ. ரொனால்டோவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் மட்டும் 19 கோடிப் பேர். சர்வதேச அளவில் திரைப்பட பிரபலங்கள், அரசியல் தலைவர்களை விட , ஒட்டுமொத்த சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையிலும் ரொனால்டோவிற்கே முதலிடம். மெஸ்ஸி ,நெய்மார் உட்பட எந்த கால்பந்து வீரருக்கும் இந்த அளவு ரசிகர்கள் இருந்ததில்லை. கடந்த 2016 ஆம் ஆண்டு முகநூலில் 12க் கோடி லைக்குகள் வாங்கியதற்காக கின்னஸ் புத்தகத்தில் ரொனால்டோ இடம்பெற்றார். இதுவரை முறியடிக்கப்படாத சாதனை அது, இப்படிப்பட்ட பிரபலங்களோடு சர்ச்சைகளும் சேர்ந்து ஊஞ்சலாடுவது ஒன்றும் புதியதல்ல.
சர்ச்சைகளை சரியவிட்டவர்:
உலகை உலுக்கிய #metoo சர்ச்சையிலிருந்து ரொனால்டோவும் தப்பவில்லை. அவர் மீது மாடல் அழகி கேத்தரின் என்பவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே முடிக்க, ரொனால்டோவின் வழக்கறிஞர்கள் சார்பாக இரண்டரைக் கோடி பேரம் பேசப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை ரொனால்டோ பகிரங்கமாக மறுத்தார். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நான் சுத்தமானவன். தேவையற்ற குற்றச்சாட்டுகள் தன்மீது சுமத்தப்படுவதாக வருத்தம் தெரிவித்தார் ரொனால்டோ. இருப்பினும் ரொனால்டோவுக்கு எதிராக கேத்தரின் தொடர்ந்த வழக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. ரொனால்டோவிற்கு ஜூனியர், மேட்யு(mateo) -இவா மரியா எனும் இரட்டை குழந்தைகளும் , அலெனா மார்ட்டினா , பெல்லா எஸ்மர்ல்டா என ஐந்து குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் மூன்று குழந்தைகள் வாடகைத்தாய் மூலம் பிறந்தவர்கள். நான்காவது குழந்தையும், ஐந்தாம் குழந்தையும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் எனும் காதலி மூலம் பிறந்தது.
நாட்டிற்கு பெருமை:
சர்ச்சைகளைத் தாண்டி விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்ட ரொனால்டோ தனது நாட்டிற்கும் பெருமை தேடித் தர உழைத்துள்ளார். இதுவரை எட்டு முறை ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் கலந்துக் கொண்ட போர்ச்சுகல் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. 2016 ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைப்பெற்ற ஐரோப்பிய கால்பந்து போட்டிகளை, கால்பந்து ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஸ்பெயின், ஜெர்மனி இத்தாலி எனப் பெரிய ஜாம்பவான்களை சமாளித்து கடும் போட்டிகளுக்கிடையே இறுதிப்போட்டிக்கு முன்னேறியது, ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி. சொந்த மண்ணில் பிரான்ஸை எதிர்த்து களமிறங்கிய போர்ச்சுகல் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் முதல் பாதியிலேயே பிரான்ஸ் வீரர் டிமிட்ரி தாக்கியதில் ஆட்டத்தை தொடர முடியாமல் வெளியேறினார் ரொனால்டோ. விளையாட முடியாமல் ரொனால்டோவின் கண்கள் கண்ணீரில் மிதந்தன. போர்ச்சுகல் ரசிகர்கள் இருளில் மூழ்கினர். வானமே இடிந்து விழுந்தது போல் மைதானமே மையான அமைதியானது.இருந்தாலும் தன்னம்பிக்கையை விட்டுக்கொடுக்காத ரொனால்டோ அவே லைனில் நின்றுகொண்டு பயிற்சியாளருக்கு நிகராக வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார் ரொனால்டோ. இதனால் எக்ஸ்ட்ரா நேரத்தில் போர்ச்சுகல் அணி வீரர் கோல் அடிக்க வரலாற்றில் முதல் முறையாக சொந்த நாட்டுக்கு கோப்பையை வென்றுக் கொடுத்தார் ரொனால்டோ.
2018 வரை ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடிய ரொனால்டோ, 451 கோல்களை அடித்து அமர்க்களப்படுத்தினார். ரொனால்டோ இடம்பெற்ற ரியல் மேட்ரிட் அணி, 2011 ல் "கோபா டெல் ரே", 2012 ல் "லா லீகா" சாம்பியன், 2012 ல் "ஸ்பானிஷ் சூப்பர் கோப்பையை"வென்றது. ரொனால்டோவின் ஆதிக்கத்தால் 2014, 2016, 2017,2018 என தொடர்ச்சியாக "சாம்பியன்ஸ் லீக்" டைட்டிலையும் வென்று அசத்தியது.
சமூக நலம்:
விளையாட்டு வீரர்கள் என்றாலே அவர்களது உடலில் பச்சை குத்தியிருக்கும்.ஆனால் ரொனால்டோ இதில் விதிவிலக்கு , இதுவரை உடலில் ஒரு சிறிய இடத்தில் கூட பச்சை குத்தியது கிடையாது. காரணம் ரொனால்டோ ஆண்டுக்கு இருமுறையாவது இரத்ததானம் செய்துவிடுவார். அதுமட்டுமின்றி 2013 ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட பாலன் டீ ஓர் விருதை ஏலத்தில் விட்டு , அதன் மூலம் கிடைத்த 50 கோடி ரூபாயை கொடூரமான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கினார். 2015 ஆம் ஆண்டு நேபாள் பூகம்பத்திற்கு என 40 கோடி என சமூக நலப்பணிகளிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மனிதர் . சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரின் போதும், அவர் வெளியிட்ட ஒரு வீடியோ அந்நாட்டு மக்களுக்கு ஆதரவளித்து. கருப்பின மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும், கடுமையாக கண்டித்து வருகிறார். ரொனால்டோவின் கடின உழைப்பிலிருந்து நிறைய பாடங்களை கற்றிருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார். இதுவரை அவரை மிஞ்சும் ஒரு வீரரை கண்டதில்லை எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். விராட் கோலிக்கு மட்டுமல்ல பல எண்ணற்ற விளையாட்டு வீரர்களுக்கும் , கால்பந்து உலகில் முடிசூடா மன்னனாக இருக்கும் ரொனால்டோ தான் ரோல் மாடல். அசாத்தியமான திறமையால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ரொனால்டோவை கவுரப்படுத்தும் விதமாக, அவர் பிறந்த தீவான மதீராவில் உள்ள விமான நிலையத்திற்கு அந்நாட்டு அரசு கிறிஸ்டியானோ ரொனால்டோ எனப் பெயர் சூட்டியது.
கருவாக இருக்கும் நிலையில் கலைக்கப்பட்டிருக்க வேண்டிய ரொனால்டோ, இன்று கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் கலைக்க முடியாத கனவாக ஆதிக்கம் செலுத்துகிறார். இன்னும் எத்தனை முறை இந்த உலகம் சுழன்றாலும் கால்பந்தின் குறியீடு போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ரொனால்டோ தான்.
Post a Comment