-->

History of Bodhidharmar in Tamil part 1-வீரத்துறவி போதிதர்மரின் வரலாறு தமிழில் பாகம் 1-

3 minute read

"போதிதர்மர்"  7ஆம் ஆறிவு திரைப்படம் வெளிவந்த பிறகே பெரும்பாலான தமிழர்களுக்கு இந்தப் பெயர் பரிட்சியமானது. அன்றைய காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ இளவரசர் ஒருவர் சீன தேசத்திற்கு பயணம் செய்வதாக படத்தின் கதைக்கரு அமைக்கப்பட்டிருக்கும். 7 ஆம் அறிவுப் படத்தின் நாயகனாக சூர்யா நடித்திருந்தாலும் , அதன் உண்மையான நாயகன் போதிதர்மன் தான். காஞ்சிபுரத்தில் பிறந்து, சீனாவிற்கு சென்று குங்பூ(kung fu) எனும் தற்காப்பு கலையை நிறுவிய போதிதர்மருக்கு சீனாவில் எங்கு பார்த்தாலும் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் நம்மூரிலோ காஞ்சிபுரத்தில் ஒரே ஒரு சிறிய பழங்கால சிலை மட்டுமே போதிதர்மருக்கு உள்ளது. ஒரு தமிழனின் வரலாறு மறைக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது என்றாலும், சீனாவில் குங்பூ கலையை அறிமுகப்படுத்தியது ஒரு தமிழன் என்பது தமிழர்களுக்கு பெருமை வாய்ந்ததாகும். போதி தர்மர் வளர்த்த இந்த தற்காப்பு கலையை சீனாவில் இன்றும் தலைமுறை தலைமுறையாக கற்று வருகின்றனர். இதன் காரணமாக சீனப் பிரதமர்  ஜிஜின்பிங் (Xi jinping) மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையேயான சந்திப்பு போதிதர்மர் வாழ்ந்த  ஊரான மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. சீன அதிபரின் வருகையை ஒட்டி பல்வேறு இடங்கள் பரிந்துரைக்கப்பட்ட போதும் சீனப் பிரதமர் ஜி ஜின் பிங்  தேர்வு செய்தது மாமல்லபுரத்தை தான். பாதுகாப்பு கெடுபிடிகளால் ஹெலிகாப்டர் மூலம் மகாபலிபுரம் செல்லலாம் என அறிவுறுத்தப்பட்ட போதும், தன் தேசத்தின் மகான் பிறந்து வளந்த மண்ணை கண்டுகளிக்க சுமார் 50 கி.மீ தூரம் காரிலே பயணம் செய்தார் சீனப் பிரதமர் ஜிஜின்பிங்.

History of Bodhidharmar in tamil

போதிதர்மரின் ஆரம்பம்:

சீன மக்களின் தெய்வமாக கருதப்படும் மற்றும் ஜிஜின்பிங் வியந்துப் பேசிய போதி தர்மர் பிறந்தது பல்லவ வம்சத்தில். சோழ பாண்டியர்களுக்கு முன் பல்லவ இனமே இத்தேசத்தை ஆண்டது, 3 ஆம் நூற்றாண்டில் பல்லவ இனம் காஞ்சிபுரத்தை தலைநகராக ஆண்ட போது, அது புத்த மதத்தை பின்பற்றும் தேசமாக இருந்தது. ஆந்திராவின் கிருஷ்ணா நதி முதல் தமிழகத்தின் புதுக்கோட்டை வரை பல்லவ சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்திருந்தது. முதன்முதலாக கப்பற்படை பயன்பாட்டில் இருந்ததும் பல்லவர்கள் ஆட்சியில் தான். இதனால் சீனா உட்பட பல்வேறு தேசங்களுடன் நேரடி வர்த்தக தொடர்பில் இருந்தார்கள் பல்லவர்கள். கி.பி 436 முதல் கி.பி 460 பல்லவ வம்சத்தை ஆட்சி செய்த சிம்மவர்மனுக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர், இதில் இளையவரான புத்ததர்மரே போதிதர்மர் ஆவார். இவர் பிறந்த ஆண்டு கி.பி 440 ஆம் ஆண்டு. அதாவது புத்தர் பிறந்து சரியாக 1000 ஆண்டுகள் கழித்து பிறந்தார் போதிதர்மர். புத்தர் மீது இருந்த அதீத நம்பிக்கையாலும், ஈடுபாட்டாலும் தன் மகனுக்கு புத்த தர்மர் எனப் பெயரிட்டார் சிம்மவர்மன். சிறிதளவும் அகங்காரம் இல்லாத புத்த தர்மர் தனது சிறுவயதினை முழுவதும் புத்த துறவிகளுடனே கழித்தார். புத்த மதத்தை சிம்மவர்மன் வெகுவாக போற்றி வந்ததால், காஞ்சிபுரத்தில் புத்த பூர்ணிமா நிகழ்ச்சி நடைப்பெறுவது வழக்கம். இந்நிகழ்ச்சியில் அதிகளவில் புத்த துறவிகளை தனது அரசவைக்கு அழைத்து தியானம், வழிபாடு முதலிய கலந்துரையாடல்களை நடத்துவார் சிம்மவர்மன். ஒரு முறை அரசவைக்கு வந்த புத்த துறவி ஒருவர் பிரஜினதாரா எனும் ஒரு பெண்துறவியைக் குறித்து சிலாகித்து பேசினார், அவர் காடுகளுக்கு இடையே தியானம் செய்பவர் என்றும் கூறினார்.பிரஜினதாரா குறித்து கேட்க கேட்க , அவரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம், சிம்மவர்மன் மனதில் தோன்றியது. பிரஜினதாரா புத்த பீடத்தின் 27 ஆவது பிரதான குருவாக இருந்தவர். 

போதிதர்மரின் குரு:

பிரஜினதாரா தான் ஆளும் காஞ்சி மண்ணில் காலிட்டால், தன் மக்கள் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என எண்ணிய அரசர், தன் இரண்டு அமைச்சர்கள் மற்றும் இரு புத்த துறவிகளை பிரஜினதாரா வாழும் வனப்பகுதிக்கு அனுப்பினார்.அந்த வனப்பகுதி மகததேசம் என்றழைக்கப்படும் இன்றைய பீகார் , மற்றும் மேற்குவங்காளம் எல்லைப் பகுதியில் அமைந்திருந்தது. கடும் தவத்தில் இருந்த பிரஜினதாரா அவர்களைக் கண்டதும் கண்விழித்தார், தாங்கள் வந்த காரணத்தைக் கூறி பிரஜினதாரவை காஞ்சிக்கு அழைத்து சென்றார். அங்கு வந்த அவருக்கு அரச மரியாதை செய்து, சிம்மவர்மன் புத்த மதம் தொடர்பான கேள்விகளைக் கேட்டு திருப்திகரமான பதில்களை கேட்டறிந்தார்.தன்னைவிட புத்த மதத்தில் அதிக ஈடுபாடு கொண்ட தனது இளைய மகன் புத்த தர்மருக்கு அன்ம ஞானம் வழங்க பிரஜினதாராவிடம் கேட்டுக் கொண்டார் சிம்மவர்மன். அவரின் கோரிக்கையை ஏற்று புத்த தர்மனை தன்னுடன் அழைத்துச் சென்றார் பிரஜினதாரா. இவர்கள் கால் வழியாக பல நாட்கள் நடந்து மகததேசம் சென்றடைந்தார்கள். வந்த நாள் முதல் பிரஜினதாரா புத்த தர்மனிடம் ஏதும் பேசாவிட்டாலும், புத்த தர்மனின் நடவடிக்கைகளைக் கொண்டே , புத்தரின் கருத்துகளை எதிர்காலத்தில்  உலகெங்கிலும் கொண்டு சேர்க்கும் சீடன் என்ற எண்ணம் பிரஜினதாரா மனதில் ஏற்பட்டது. பிரஜினதாராவின் ஓலைச்சுவடிகள் பாலி மொழியில் இருந்ததால், ஒரு புத்த துறவியைக் கொண்டு புத்த தர்மருக்கு பாலி மொழியைக் கற்பிக்க ஏற்பாடு செய்தார். அறிவுக் கூர்மைக் கொண்ட புத்த தர்மர் மிகக் குறுகிய காலத்திலேயே அம்மொழியில் புலமைப் பெற்றார். தொடர்ந்து ஆசிரமத்தில் இருந்த ஓலைச்சுவடிகளை ஒன்று விடாமல் கற்றுத் தேர்ந்தார், அதுமட்டுமின்றி ஆயுர்வேத ஓலைச்சுவடிகளையும் கற்றுத் தேர்ந்தார். இதைத் தொடர்ந்து ஆயுர்வேத மருத்துவத்தில் கைத்தேர்ந்த புத்த துறவியிடம் புத்த தர்மரை அனுப்பிவைத்தார் பிரஜினதாரா. மருத்துவத்தில் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த பின் அவரை போர்க்கலை பயிற்சிக்கு அனுப்பினார்  பிரஜினதாரா. 

கலைகளில் ஆர்வம்:

போர்முறையில் வர்மக்கலையில் கைத்தேர்ந்த ஒருவரை எளிதில் வீழ்த்தி விட்டு முடியாது. வர்மக்கலையில் மகாசக்தி வாய்ந்ததும், இரகசியமானதும் நோக்குவர்மம். தீவிர பிரம்மசாரியத்துடன் மனக் கட்டுப்பாட்டையும், மனோ சக்தியையும் வளர்த்து கொண்ட ஒருவரால் மட்டுமே இந்த கலையை கற்றுக்கொள்ள முடியும் புத்த தர்மர் இக்கலையையும் கற்றுத் தேர்ந்தார், ஆழ்ந்த தியானம் மூலமாகவும், இடைவிடாது பயிற்சி மூலமாகவும் புத்த தர்மர் அன்ம ஞானம் பெற்றார். அடுத்ததாக பிரஜினதாராவின் கட்டளையை ஏற்று மகததேசத்திலிருந்து தன் தேசமான காஞ்சிபுரத்திற்கு வந்தார். புத்த தர்மர். தனது மகனின் ஆன்ம ஞானத்தை கண்டு வியந்த சிம்மவர்மன், மூத்த மகனைவிட இளையவனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலும் வலுப்பெற்றது. ஆனால் புத்த தர்மரோ, அரண்மனை மீதோ, ஆட்சி அதிகாரத்திலோ தனக்கு சிறிதளவும் ஆசை இல்லை என்பதைக் கூறினார்.பல்லவ வம்சம் குறித்த கவலையில் மரணப்படுக்கையில் படுக்கையில் படுத்தார் அரசர் சிம்மவர்மன். தனது தந்தையிடம் "எனது கால்கள் செல்ல வேண்டிய பாதை எனது கண்களுக்கு தெரிவதால் தயவு செய்து என்னை தடுக்க வேண்டும் "எனக் கூறினார் புத்த தர்மர். மண்ணுக்கு ஆசைப்பட்டு, மண்ணுக்காகவே சண்டையிட்டு மடியும் அரசக்குடும்பத்தில் பிறந்த ஒருவன் நிலையற்ற அரசபோகத்தை உதறி , நிலையான ஒன்றை பெறுகிற முயற்சியில்  உறுதியாக இருப்பதைக் கண்டு, மகனின் ஆசைக்க  சம்மதம் தெரிவித்தார் மன்னன் சிம்மவர்மன். இதனையடுத்து ஓரிரு நாட்களிலே மன்னன் சிம்மவர்மன் மரணித்து விட, அவரது மூத்த மகன் கந்தவர்மன் பல்லவ மன்னனாக பொறுப்பேற்றுக்கொண்டார். 


History of Zen Founder Bodhidharmar in tamil part 2..