-->

Tamil kings who lost their lives in thirst for freedom.சுதந்திர தாகத்தில் இன்னுயிரை நீத்த தமிழ் மன்னர்கள்:

1 minute read


நம் நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்க தனது சுவாசத்தை துறந்த மன்னர்கள் பலர் உண்டு. இந்த சுதந்திர திருநாளில் அவர்கள் சிலரை நினைவுக்கூறுவோம் . இங்கிலாந்தில் இருந்து கப்பலில் கடல் கடந்து  தூத்துக்குடிக்கு இரண்டு ஆங்கில பாதிரியார்கள் வருகை தந்தனர். தூத்துக்குடி கரிசல்காட்டில் பந்து பந்தாய் வெடித்து சிதறி கிடந்த பருத்தியை பார்த்து வியந்தனர். உடனே அதைபற்றி இங்கிலாந்து இராணி விக்டோரியா மகாராணிக்கு  கடிதம் எழுதினர். இந்த கடிதமே ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கான முதல் அழைப்பாக அமைந்தது. 


Tamil kings who lost their lives in thirst for freedom


அந்தக் கடிதத்தைப் பார்த்த இங்கிலாந்து இராணி அவர்கள், இந்தியாவில் வாணிபம் செய்ய ஆங்கிலேயர்களை அனுப்புகிறார். இங்கு வந்த ஆங்கிலேயர்கள், அவர்களுடைய வணிகத்திற்காக நிறுவிய நிறுவனம் தான்  கிழக்கு இந்திய கம்பெனி ஆகும். இந்த கம்பெனியிடம் வாங்கியக் கடனை  செலுத்த முடியாததால் வரி வசூலிக்கும் அதிகாரம் ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்பட்டது. சொந்த நாட்டில் வாழ்வதற்கு வரி செலுத்த வேண்டுமா?  என தமிழ் மன்னர்கள் சிலர் வெகுண்டு எழுந்தனர். 

வீரபாண்டிய கட்டபொம்மன் , பூலித்தேவன் ஆகியோர் தொடங்கி வைத்த விடுதலைப் போர் புயலாக சுழன்று அடித்தது. ஆங்கிலேயர்களுக்கு சிப்ப சொப்பனமாக திகழ்ந்த வீரபாண்டியகட்டபொம்மனை ஆங்கிலத் தளபதி பேனர்மான் சிறைப்பிடித்து கயத்தாரில் தூக்கிலிட்டார். கட்டபொம்மனின் கோட்டை கொத்தளங்கள் இடித்து தரமட்டமாக்கப்பட்டன. 

சிவகங்கை சீமையின் மன்னர் 
முத்துவடுகநாதரை எந்த வித காரணமும் இல்லாமல் கர்னல் பான்சோர் சுட்டுக்கொன்றார்.இதனால் இராணி வேலுநாச்சியார், மருதுபாண்டியர்களுடன் திண்டுக்கல்லுக்கு வந்து ஹைதர் அலியின் ஆதரவோடு விருப்பாச்சி கோபாலநாயக்கரின் பாதுகாப்பில் தங்கி இருந்தனர். இராணி வேலுநாச்சியார் குதிரை ஏற்றம்,வாள்வீச்சு போர் சிலம்பம் போன்ற வீரக்கலைகளை கற்ற வீராங்கனை ஆவார். 

ஏழரை ஆண்டுகளுக்கு பிறகு சிவகங்கை சென்று தனது கணவரைக் கொண்ற கர்னல் பன்சோரை தூணில் கட்டி வைத்து அவருக்கு முன்பாக சிம்மாசனத்தில் அமர்ந்தார். இதேபோல மருதுப்பாண்டியர்களும் நிகரற்ற மாவீரர்கள் ஆவார்கள். இவர்களும் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். வீரம், விவேகம், கலை என அனைத்து துறைகளிலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஏராளம். இந்திய சுதந்திரத்தைப் போற்றுவதோடு இச் சுதந்திரத்தை பெறப் பாடுப்பட்டவர்களையும் நாம் இந்நாளில் நினைவுக்கூறுவோம்.